கம்பராமாயணம் 7656 · யுத்த 15.343
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாறு வானரப் பெருங்கடல் ஓட - பகையாக உள்ள வானரப் பெரும் படையாகிய கடல் நிலை கெட்டு ஓட; தன் தோள் நின்று வார் சோரி ஆறு - தன் தோளில் இருந்து வடிகின்ற குருதியாகிய ஆறு; விண்தொடும் பிணம் சுமந்து ஓட - விண்ணைத் தொடுமளவு போர்க்களத்தில் குவிந்துள்ள பிணங்களைச் சுமந்து கொண்டு ஓட; மேல் அமரரும் இரிந்து ஓட - வானத்தில் உள்ள தேவர்களும் நிலை கெட்டு ஓட; இலங்கையும் விலங்கலும் பறவையும் கூறு கூறுபட்டு குலைந்து ஓட - இலங்கை நகரும் அங்குள்ள மலைகளும் பறவை முதலிய உயிரினங்களும் குருதி ஆற்றின் வேகத்தால் பலவகையாகப் பிரிந்து நிலைகுலைந்து ஓட; மழைக்குலம் இரிந்தோட - மேகக் கூட்டம் நிலை கெட்டு ஓட; ஏறு சேவகன் மேல் எழுந்து ஓடினன் - சிங்கவேறு போன்ற இராமன் மேல் எழுந்தோடினன் கும்பகருணன் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the great sea of hostile monkeys ran, as the river of blood streaming from his shoulder
- ran bearing corpses piled up to the sky, as the gods above fled,
- as Ilaṅkai, the mountains and the birds ran broken, in pieces,
- he rose and ran at the lion of a warrior, while the hosts of clouds fled.
What the poem says
A rush of motion: the monkeys flee, the blood from Kumpakaruṇaṉ's severed shoulder runs as a river carrying sky-high heaps of dead, the gods scatter, Ilaṅkai and its hills and birds are thrown into disorder, and even the clouds flee as the giant charges at Irāmaṉ.