கம்பராமாயணம் 7657 · யுத்த 15.344

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஈற்றுக் கையையும் இக்கணத்து அரிதி என்று - மற்றொரு கையையும் இப்பொழுதே அரிந்திடுவாய் என்று; இமையவர் தொழுது ஏத்த - தேவர்கள் கைதொழுது துதிக்க; தோற்றுக் கையகன்று ஒழிந்தவன் - இராமனுக்கு முன் வலி தோற்று வலக்கை நீங்கி ஒழிந்தவனாகிய கும்பகருணனுடைய; நாள் அவை தொலையவும் - வாழ்நாள்கள் கெடுமாறும்; தோன்றாத கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட - இதுவரை அரக்கர் கண்முன் தோன்றியிராத யமனுக்கு ஐயமும் அதனால் வரும் அச்சமும் நீங்குமாறும்; நெடுங்கொற்றவன் - மிக்க வெற்றிக்குரிய இராமன்; கொலை அம்பால் - கொல்லும் தன்மை உள்ள தன் அம்பால்; வேற்றுக் கையையும் - மற்றொரு கையையும்; வேறும் ஓர் அணை மான வேலையில் இட்டனன் - வேறு அணையென்று தோன்றுமாறு கடலில் இட்டனன்.

ஈற்றுக்கை-மற்றொருகை (இடக்கை) கையகன்று செயலற்று எனினுமாம். வேறும் ஓர் அணை மான. முன்பு கட்டிய சேது அணை இப்போது இட்ட கும்பகருணனின் இடக்கை வேறு ஓரணை என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the gods bowed and praised him, saying, 'Cut off the last hand too, this very moment,'
  2. so that the days of him who was beaten and had lost his hand might end, and the unseen
  3. Death be rid of doubt and fear, the great conqueror, with a killing arrow,
  4. cast the other hand too into the sea, like yet another causeway.

What the poem says

Urged by the gods, Irāmaṉ cuts off Kumpakaruṇaṉ's left arm too. Death, who has never dared show himself to the giant, can now approach without fear. The arm falls into the ocean and lies there like a second causeway beside the bridge the monkeys built to Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘īṟṟuk kaiyaiyum ik kaṇattu ariti ‘eṉṟu imaiyavar toḻutu ētta,
tōṟṟuk kaiyakaṉṟu oḻintavaṉ nāḷavai tolaiyavum, tōṉṟāta
kūṟṟukku aiyamum accamum keṭa, neṭuṅ koṟṟavaṉ kolai ampāl,
vēṟṟuk kaiyaiyum vēlaiyil iṭṭaṉaṉ, vēṟum ōr aṇai māṉa.