கம்பராமாயணம் 7658 · யுத்த 15.345
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சுந்தரத் தடந் தோள்வளை - அழகிய பெரிய தோளில் அணிந்த வளையானது; மாசுணம் சுற்றிய தொழில் காட்ட - பாம்பு சுற்றிய தன்மையைத் தோற்றுவிக்க; மற்று அவன் மணி அணி வயிரத் தோள் - அந்தக் கும்பகருணனுடைய மணி பதித்த அணிகலன்களை அணிந்த வயிரத் தோள்கள்; சந்திரப் பெருந் தூணொடு சார்த்தியது - சந்திரனாகிய பெரிய தூணோடு சார்த்தியதாய்; அதில் ஒன்றும் தவறு ஆகாது - கடைகின்ற அந்த மத்தின் தன்மையில் குறைவு படாததாய்; அந்தரத்தவர் அலைகடல் அமுது எழ - தேவர்கள் அலைகளை உடைய பாற்கடலில் அமுது தோன்றுமாறு; கடைவுறும் அந்நாளில் - கடைகின்ற அந்நாளில்; மந்தரத்தையும் கடுத்தது - மந்தர மலையையும் ஒத்தது.
தோள்வளையுடன் கடலில் வீழ்ந்த கும்பகருணனது கை பாற்கடலில் நடப்பட்டு வாசுகி என்ற பாம்பு சுற்றிய மந்தரமலை போல் தோன்றியது. சந்திரப் பெருந்தூணோடு சேர்த்தியது. மந்தரத்தையும் கடுத்தது என்று இயையும். சந்திரப் பெருந்தூணோடு சார்த்தியது என்பது கடல் கடைந்த காலத்து மந்தரத்துக்கு இயற்கை அடைமொழி. மாசுணம்-பாம்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like a churning rod leaning on the great pillar of the moon, lacking nothing of it,
- on that day when the gods churned the wave-tossed sea for the nectar to rise,
- with the armlet on the beautiful broad arm showing the serpent coiled about it,
- so his jewelled, diamond-hard arm resembled Mantara.
What the poem says
Kumpakaruṇaṉ's severed arm, standing in the sea with its armlet, recalls the myth of the churning of the ocean of milk: the gods used Mount Mantara as a churning rod, wound with the serpent Vāsuki, and propped against the moon as a pillar. The armlet is the serpent, the arm the mountain.