கம்பராமாயணம் 7659 · யுத்த 15.346
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிவண வண்ண வான் கருங்கடல் கொடு வந்த செயலினும் - தனக்குத்தானே ஒத்த நிறமுடைய அழகிய பெரிய கடலில் கொண்டு சேர்த்த செயலாலும்; செறி தாரை சுவண வண்ண வெஞ்சிறை உடைக் கடுவிசை முடுகிய தொழிலானும் - நெருங்கிய ஒளித்தொகுதியாகிய பொன்னிறத்தைக் கொண்ட விரும்பத்தக்க சிறகுடன் மிக்க விரைவுடன் விரைந்து சென்ற செயலாலும்; அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும் - அவ்விடத்து இராமபிரானது கட்டளைப்படி தொழில் செய்த தன்மையினாலும்; அயில்வாளி உவண அண்ணலை ஒத்தது - இராமபிரானது கூர்மையான அம்பு கருடனை ஒத்தது; அவ் உயர் பொன் தோள் மந்தரம் ஒத்தது - அக்கும்பகருணனுடைய உயர்ந்த அழகிய தோள் மந்தர மலையை ஒத்தது.
கடலில் சேர்த்த செயலாலும், பொன்னிறம் கொண்ட சிறகுடன் விரைந்து சென்ற தன்மையாலும், இராமனது கட்டளைப்படி தொழில் பட்ட தன்மையாலும் வாளி கருடனை ஒத்தது கும்பகருணன் தோள் மந்தரம் ஒத்தது என்க. உவண அண்ணல் - கருடன். திருமால் பாற்கடலைக் கடைதற் பொருட்டு கருடனை அனுப்பி மந்தர மலையைக் கொணரச் செய்ததாக ஒரு வரலாறு உண்டு. என்பது இச்செய்யுளால் புலனாகிறது, மகாபாரதத்தில் திருமாலின் கட்டளையால் அநந்தன் என்னும் நாகராசன் மந்தர மலையைப் பெயர்த்துத் தந்ததால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர் என்ற செய்தி காணப்படுகிறது. சுவண வண்ணம் - பொன் வண்ணம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In carrying it to the beautiful, vast, dark sea of matching hue, in the deed
- of rushing at great speed with fierce wings of golden hue and dense radiance,
- and in its serving as the Lord commanded there, the sharp arrow
- was like the lord of birds; and that tall golden arm was like Mantara.
What the poem says
The image continues. Irāmaṉ's arrow is like Garuḍa, the golden-winged king of birds: it flies swiftly, carries the arm to the sea and serves its master. The arm is Mount Mantara. One tradition says Vishnu sent Garuḍa to fetch Mantara for the churning; the Mahābhārata gives the task to the serpent Anantaṉ.