கம்பராமாயணம் 7669 · யுத்த 15.356
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாக - தன்னைச் சரணாகதி அடைந்த புறா ஒன்றின் பொருட்டாக; துலை புக்க - தராசுத் தட்டில் ஏறிய; மைக்கடங்கார் மதயானை வாள் வேந்தன் வழிவந்தீர் - கருமையான மதநீரை மேகம் போல் பொழிகின்ற வாள் படையுடைய சிபி மன்னனது கால்வழி வந்தவரே!; இக்கடன்கள் உடையீர் - நீங்கள் அச்சிபி போல் அன்புக் கடன்களும் உடையீர்; நீர் எம்வினை தீர்த்து - நீர் எங்களது உறவினால் உண்டான தீவினைகளைத் தீர்த்து; உம்முடைய கைக்கு அடைந்தான் - உம்முடைய கையில் அடைக்கலம் அடைந்தவனாகிய வீடணனது; உயிர் காக்கக் கடவீர் - உயிரைப் பாதுகாக்கக் கடவீர்; என் கடைக்கூட்டால் - இது என் கடைசி விருப்பமாகும்.
அண்ணனுக்கு உதவலாம் வழிவகை இல்லை என்றும் இனி அவன் உய்யுமாறு அரிது என்னும் உணர்ந்த கும்பகருணனின் உடன்பிறப்புப் பாசம் தம்பியைக் காப்பாற்ற முற்படுகிறது. தன் குலம் தழைக்கவும், கையினால் எள்நீர் நல்கவும் தம்பியாவது உயிர் வாழ வேண்டும் என்று எண்ணிய கும்பகருணன் தன் இறுதி விருப்பமாக அதை வெளியிடுகிறான். தனக்கு என வாழப் பிறர்க்கு உரிய வாழ்வினன் அல்லவா அவன்?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You who come in the line of the king with the sword and dark rut-dripping elephants,
- who climbed onto the scales for the sake of a dove that came to him for refuge!
- You who hold these duties, end the evil that comes of us, and
- you must protect the life of him who has come into your hands; this is my last wish.'
What the poem says
Kumpakaruṇaṉ appeals to Irāmaṉ's ancestry. King Cipi (Śibi) of his line once weighed his own flesh on the scales to save a dove that had sought his protection. So, as his dying wish, Kumpakaruṇaṉ asks Irāmaṉ to protect Vīṭaṇaṉ, who has taken refuge with him. Unable to help his elder brother, he tries to save the younger.