கம்பராமாயணம் 7670 · யுத்த 15.357

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆதியாய் - முழுமுதலே!; அரசர் உருக்கொண்டு அமைந்த வேதியா - உலகில் அரசர் வடிவு கொண்டு வந்து வேதங்களால் புகழப்படுகின்றவனே; நீதியால் வந்தது ஒரு நெடுந்தரும நெறி அல்லால் - நீதிமுறைப்படி அமைந்து வந்த சிறந்த அற நெறி அல்லாது; சாதியால் வந்த சிறுநெறி அறியான் - சாதிப் பிறப்பினால் உண்டான அறமற்ற நெறியை அறியாதவனாகிய; என் தம்பி - எனக்குத் தம்பியாகிய வீடணன்; உனை அடைந்தான் - உன்னை அடைக்கலமாக அடைந்தான்; இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன் - மீண்டும் அவனை உனக்கு அடைக்கலப் பொருளாகக் கொண்டு காத்தலை யான் வேண்டினேன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'My younger brother knows nothing but the long path of dharma that comes from justice;
  2. he does not know the petty path that comes from birth;
  3. O First One! He has come to you; O Lord of the Vedas, who took the form of a king!
  4. I beg you to keep him under your protection still.'

What the poem says

Kumpakaruṇaṉ vouches for Vīṭaṇaṉ: he follows only true righteousness, not the base ways of their demon race. He addresses Irāmaṉ as the primal god who has come down in the form of a king, and asks him to keep Vīṭaṇaṉ always under his protection.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nītiyāl vantatu oru neṭun taruma neṟi allāl,
cātiyāl vanta ciṟu neṟi aṟiyāṉ, eṉ tampi;
ātiyāy! uṉai aṭaintāṉ; aracar urukkoṇṭu amainta
vētiyā! iṉṉum uṉakku aṭaikkalam yāṉ vēṇṭiṉēṉ.