கம்பராமாயணம் 7672 · யுத்த 15.359

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நம்பி - ஆடவரில் சிறந்தவனே!; அத்தகவு இல்லான் - அந்த நற்குணமில்லாதவனாகிய இராவணன் தம்பி என நினைந்து இரங்கித் தவிரான் - வீடணன் தம்பி ஆயிற்றே என்று எண்ணி இரக்கம் கொண்டு உயிரோடு விட்டிடான்; இவன்தனைக் காணின் கொல்லும் - இவனைக் கண் எதிரே கண்டால் கொல்லுவான்; இறை நல்கானால் - சிறிது கூட அருள் செய்ய மாட்டான்; உம்பியைத்தான் - ஆகவே உன் தம்பியையும்; உன்னைத்தான் - உன்னையும்; அனுமனைத்தான் - அனுமனையும்; ஒரு பொழுதும் - ஒரு கணப் பொழுதும்; எம்பி பிரியானாக அருளுதி - என் தம்பி பிரியாதிருக்குமாறு திருவருள் செய்க; யான் வேண்டினேன் - இதனை யான் வேண்டிக் கொள்ளுகிறேன்.

வீடணனை இன்னபடி காத்தல் வேண்டும் என்று பின்னிரண்டு அடிகளில் கும்பகருணன் குறிப்பிடுகின்றான். உன்னைத்தான் உம்பியைத்தான் அனுமனைத்தான் என அமைய வேண்டிய மூன்றாமடி உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான் என எதுகைத் தொடை பற்றி அமைந்தது. உண்ணாது உறங்காது இராமனையே எப்பொழுதும் பாதுகாப்பவன் இலக்குவன் என்பது கருதி இலக்குவனை முதற்கண் குறித்தான் எனலும் ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'That one without worth will not relent, thinking "He is my brother";
  2. noble one! If he sees him he will kill him; he will not show the least mercy;
  3. so may your brother, yourself and Aṉumaṉ
  4. never for a moment be parted from my brother; this I beg.'

What the poem says

Kumpakaruṇaṉ asks that Vīṭaṇaṉ be kept always beside Ilakkuvaṉ, Irāmaṉ and Aṉumaṉ, since Irāvaṇaṉ would kill him on sight. Ilakkuvaṉ is named first partly for the metre and partly, the commentary suggests, because he guards Irāmaṉ without rest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tampi eṉa niṉaintu, iraṅkittavirāṉ at takavu illāṉ,
nampi! ivaṉtaṉaik kāṇiṉ kollum; iṟai nalkāṉāl;
umpiyaittāṉ, uṉṉaittāṉ aṉumaṉaittāṉ, oru poḻutum
empi piriyāṉāka aruḷuti, yāṉ vēṇṭiṉēṉ.