கம்பராமாயணம் 7673 · யுத்த 15.360

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘

பொருள் · Meaning in Tamil

முனிவர்களும் அமரர்களும் - முனிவர்களும் தேவர்களும்; மூக்கு இலாமுகம் என்று நோக்குவார் - என் முகத்தை மூக்கு இல்லாத முகம் என்று சொல்லிக் காண்பார்கள்; நோக்காமை - அவர்கள் அவ்வாறு நோக்காமல்; நுன் கணையால் - உன் அம்பினால்; என் கழுத்தை நீக்குவாய் - என் கழுத்தை அறுத்து நீக்குவாய்; நீக்கிய பின் - அறுத்து நீக்கிய பிறகு; நெடுந்தலையைக் கருங்கடலுள் போக்குவாய் - என் கழுத்தோடு கூடிய நெடிய தலையை கரிய கடலுக்குள்ளே மூழ்கச் செய்வாய்; இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான் - இதுவும் நான் உன்னை வேண்டிக் கொள்ளுகின்ற பொருள் என்றான் கும்பகருணன்.

தம்பியின் உயிருக்காக வேண்டியவன் தன் மானத்துக்காக இதனை வேண்டுகிறான். எதிர்மறைத் தொழிற்பெயர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'So that sages and gods, who would gaze at it as a face without a nose,
  2. may not see it, with your arrow cut through my neck;
  3. and when you have cut it, send my long head
  4. into the dark sea; this is the thing I ask of you,' he said.

What the poem says

Having asked for his brother's life, Kumpakaruṇaṉ makes a request for his own honour: Irāmaṉ should cut off his head and sink it in the ocean, so that sages and gods may never look upon his noseless face.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“mūkku ilā mukam eṉṟu muṉivarkaḷum amararkaḷum
nōkkuvār nōkkāmai nuṉ kaṇaiyāl eṉ kaḻuttai
nīkkuvāy; nīkkiyapiṉ, neṭun talaiyaik karuṅ kaṭaluḷ
pōkkuvāy; itu niṉṉai vēṇṭukiṉṟa poruḷ ‘‘ eṉṟāṉ