கம்பராமாயணம் 7674 · யுத்த 15.361
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வரம் கொண்டான் - கும்பகருணன் வரமாகக் கேட்டுக் கொண்டான்; இனி மறுத்தல் வழக்கு அன்று - ஆகையால் இனி மறுத்தல் முறைமையன்று; என்று ஒருவாளி - என்று கருதி ஓரம்பினை; உரம் கொண்ட தடஞ்சிலையின் உயர் நெடுநாண் உள் கொளுவா - வலிமை கொண்ட பெரிய வில்லின் சிறந்த நெடிய நாணைப் பூட்டி உள்ளே வைத்து; சிரம் கொண்டான் - எய்து கும்பகருணனது தலையை அறுத்தான்; கொண்டதனை - அறுத்த அந்தத் தலையை; திண் காற்றின் கடும் படையால் - வலிய காற்றின் கடிய அம்பினால்; அரம் கொண்ட கருங்கடலின் அழுவத்துள் அழுத்தினான் - ஒலி கொண்ட கரிய கடலின் நடுவில் உள்ளே விழச் செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thinking, 'He has asked a boon; to refuse it now is not right,' he set an arrow
- within the tall long string of his strong great bow
- and took the head; and the head he took, with the fierce weapon of the mighty wind,
- he plunged into the depths of the roaring dark sea.
What the poem says
Irāmaṉ grants the dying warrior's wish. He beheads Kumpakaruṇaṉ with one arrow and, with a second arrow charged with the power of the wind god, drives the head down into the depths of the ocean.