கம்பராமாயணம் 7675 · யுத்த 15.362

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாக்கூடு படர்வேலைமறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு,மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு தவிர்த்து, இருகண்புகையோடு புகை உயிர்க்கும்
மூக்கூடு புகப்புக்குமூழ்கியது அம் முகக் குன்றம்.

பொருள் · Meaning in Tamil

மாக்கூடு படர்வேலை - கருமை நிறம் மிகக் கூடியுள்ள பரந்த கடலில்; மறி மகரத்திரை வாங்கி - மடங்குகின்ற அலைகளை அப்பால் தள்ளி; மேக்கூடு, கிழக்கூடு மிக்கு இரண்டு திக்கூடு - மேற்கிலும், கிழக்கிலும் மிக்குள்ள இரண்டு திசைகளிலும்; போக்கூடு கவித்து - இடையே போதல் தவிர்த்து; இருகண் செவியூடும் - இரு கண்களிலும்; புகை உயிர்க்கும் - புகையை வெளிப்படுத்தும்; அம்முகக் குன்றம் - அந்த முகமாகிய சிறுமலை; மூக்கூடும் புகப் புக்கு மூழ்கியது - மூக்கு வழியாகவும் நீர் உள்புகுதலால் மூழ்கியது.

கடலில் மலை போன்ற முகம் விழவே கடல் நீர் முதலில் நான்கு பக்கங்களிலும் விலகியது. அந்த முகம் அறுபட்ட மூக்கின் வழி கடல் நீர் புகுந்ததால் மூழ்கி விட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thrusting back the curling, sea-monster-filled waves of the vast dark sea,
  2. blocking the way through to the west and the east, to both those wide quarters,
  3. that mountain of a face, which breathed smoke through both its eyes and ears,
  4. sank, as the water poured in even through the nose.

What the poem says

Kumpakaruṇaṉ's head, a mountain in itself, crashes into the sea and drives the waves back on both sides. It sinks when the water rushes in through the hole where its nose was cut off, a grimly fitting end to the episode of his mutilation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māk kūṭu paṭar vēlai maṟi makarat tirai vāṅki,
mēkkūṭu, kiḻakkūṭu, mikku iraṇṭu tikkūṭu
pōkkūṭu kavittu, iru kaṇ ceviyūṭum pukai uyirkkum
mūkkūṭum pukap pukku mūḻkiyatu am mukak kuṉṟam.