கம்பராமாயணம் 7677 · யுத்த 16.1

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவ்வழி - அந்தப் போர்க்களமாகிய இடத்தில்; கருணன் செய்த - கும்பகருணன் செய்த; பேர் எழில் ஆண்மை எல்லாம் - நேர்மை தவறாத அழகிய ஆண்மைச் செயல்களையெல்லாம்; செவ்வழி உணர்வு தோன்றச் செப்பினம் - செம்மையாக உணர்வில் தோன்றுமாறு கூறினோம்; இவ்வழி - இந்த இலங்கையில்; இலங்கை வேந்தன் - இலங்கை வேந்தனாகிய இராவணன்; வேட்கை - பெருங்காமத்தால்; வெவ்வழி மாயை ஒன்று - அறமல்லாத வழியாகிய சிறுமை நீங்காத மாயைச் செயல் ஒன்றினை; வேறு இருந்து எண்ணி - வேறாகத் தனி இடத்தில் இருந்து நினைந்து; இயற்றியது இயம்பலுற்றாம் - செய்ததைக் கூறத் தொடங்கினோம்.

கருணன் போரறம் தவறாது வீரப் போர் புரிய, இராவணன் அறமல்லாத மாயைச் செயலில் ஈடுபட்டான் என்றவாறு. சிறுமை - அறமற்ற சிறுநெறி; மாயை - வஞ்சனைச் செயல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There, all the great and splendid valour that Karuṇaṉ showed
  2. we have told so that it rises truly in the mind; now we begin to tell
  3. of a cruel deceit, not free of meanness, that the king of Ilaṅkai,
  4. driven by desire, plotted apart and carried out here.

What the poem says

This verse opens the Māyā Caṉakap Paṭalam, the canto of the illusory Caṉakaṉ. The poet sets the honourable valour of Kumpakaruṇaṉ against the shameful trick that Irāvaṇaṉ, consumed by lust for Cītai, now devises in secret.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1avvaḻi, karuṇaṉ ceyta pēr eḻil āṇmai ellām
cevvaḻi uṇarvu tōṉṟac ceppiṉam; ciṟumai tīrā
vev vaḻi māyai oṉṟu, vēṟu iruntu eṇṇi, vēṭkai,
ivvaḻi ilaṅkai vēntaṉ iyaṟṟiyatu iyampaluṟṟām.