கம்பராமாயணம் 7679 · யுத்த 16.3

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1உணர்த்துவென், இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி மாயை
புணர்த்துவென், சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி,
கணத்துவன் சனகன் தன்னைக் கட்டினன் கொணர்ந்து காட்ட
மண தொழில் புரியும் அன்றே? மருத்தனை உருவம் மாற்றி ‘

பொருள் · Meaning in Tamil

இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி உணர்த்துவென் - இன்றே நல்லதாகிய ஒப்பற்ற உபாயத்தினால் உனக்கு உறுதியாவது ஒரு பொருள் உணர்த்துவேன்; சீதை தானே புணர்வது மாயை புணர்த்துவென் - சீதை தானே வந்து உன்னைச் சேர்வதற்குரிய மாயைச் செயலைச் செய்வேன்; ஓர் வினையம் போற்றி - ஒப்பில்லாத வஞ்சனையைப் போற்றிச் செய்து; மருத்தனை உருவம் மாற்றி - மருத்தன் என்னும் அரக்கனைச் சனகனாக உருவம் மாற்றி; கணத்து வன் சனகன் தன்னைக் கட்டி கொணர்ந்து காட்டின் - ஒரு நொடியில் அந்த வலிய மாயா சனகனைக் கட்டிக் கொணர்ந்து காட்டினால்; மணத்தொழில் புரியும் அன்றே - உன்னைத் திருமணம் செய்யச் சீதை விரும்புவாள் அன்றே.

வினையம் - வஞ்சனை; கணத்து - நொடியில்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I will tell you today a good and sure device; I will work an illusion
  2. by which Cītai will come to you of her own accord; following this trick,
  3. if in an instant I change Maruttaṉ's form and bring that mighty Caṉakaṉ bound
  4. and show him to her, will she not consent to marriage?'

What the poem says

Mōtaraṉ proposes a cruel deception: he will disguise the demon Maruttaṉ as Caṉakaṉ (Janaka), Cītai's father, and bring him in chains before her. To save her father, he argues, she will agree to marry Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṇarttuveṉ, iṉṟu naṉṟu ōr upāyattiṉ uṟuti māyai
puṇarttuveṉ, cītai tāṉē puṇarvatu ōr viṉaiyam pōṟṟi,
kaṇattu vaṉ caṉakaṉtaṉṉaik kaṭṭiṉaṉ koṇarntu kāṭṭiṉ
maṇat toḻil puriyum aṉṟē? maruttaṉai uruvam māṟṟi ‘