கம்பராமாயணம் 7682 · யுத்த 16.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முளைப்பிறை நெற்றி வான மடந்தையர் - இளம்பிறை போன்ற நெற்றியை உடைய தேவ மகளிர்; விளக்கு ஒரு விளக்கம் தாங்கி - ஒளியுள்ள விளக்கு ஒரு விளக்கைத் தாங்கிக் கொண்டு; மின் அணி அரவின் சுற்றி - ஒளி பொருந்திய மேகலையைப் பாம்பு போல் இடுப்பிலே சுற்றி; இளைப்புறும் மருங்குல் நோவ - இளைத்தலுடைய இடை நோகுமாறு; முலை சுமந்து இயங்கும் என்ன - முலையைச் சுமந்து கொண்டு இயங்கும் என்று வருணித்துக் கூறுமாறு; முன்னும் பின்னும் வளைத்தனர் வந்து சூழ - தம் முன்னும் பின்னும் வளைத்து வந்து சூழ; வந்திகர் வாழ்த்த வந்தான் - பரவி வாழ்த்துவோர் வாழ்த்த வந்தான்.
முளைப்பிறை - இளம்பிறை; வந்திகர் - பரவி வாழ்த்துவோர்; வளைத்தனர் - முற்றெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As heavenly maidens with brows like the young crescent, so that one would say
- 'Each is a lamp holding a lamp, with a shining girdle wound like a serpent,
- carrying breasts that pain the slender waist,'
- came and surrounded him in front and behind, and as bards praised him, he came.
What the poem says
Irāvaṇaṉ comes escorted by captive celestial women, radiant as lamps carrying lamps, with jewelled girdles coiled like snakes, while court singers chant his praises.