கம்பராமாயணம் 7683 · யுத்த 16.7

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பண்களால் கிளவி செய்து, பவளத்தால் அதரம் ஆக்கி,
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கி ஈட்டி
எண்களால் அளவா மானக் குணம் தொகுத்து இயற்றினாளை,
கண்களால் அரக்கன் கண்டான், அவளை ஓர் கலக்கம் காண்பான்.

பொருள் · Meaning in Tamil

பண்களால் கிளவி செய்து - இசையால் பேச்சைச் செய்து; அதரம் பவளத்தால் ஆக்கி - உதடுகளைப் பவளத்தால் ஆக்கி; பெண்கள் ஆனார்க்குள் - பெண்களாய்ப் பிறந்தவர்களுக்கு அமைந்த; நல்ல உறுப்பு எலாம் பெருக்கி ஈட்டி - அழகிய உறுப்புகளை எல்லாம் மிகுதியாகச் சேர்த்து உண்டாக்கி; எண்களால் அளவு ஆம் மானக்குணம் தொகுத்து இயற்றினாளை - எண்ணி அளவிட முடியாத பெருமை மிகு பண்புகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டவளான சீதையை; கண்களால் அரக்கன் - தன் இருபது கண்களாலும் காம நோக்கோடு இராவணன்; அவளை ஓர் கலக்கம் காண்பான் - அந்தச் சீதைக்கு ஒரு பெரும் கலக்கத்தை உண்டாக்கிக் காண்பதற்காக; கண்டான் - பார்த்தான்.

மானக்குணம் - பெருமை மிகு பண்பு. கண்டான்....காண்பான் - தொடை முரண்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Her, made with melody for her speech and coral for her lips,
  2. gathering abundantly every fine feature found among women,
  3. fashioned by assembling noble virtues beyond counting,
  4. the demon looked on with his eyes, to see her in turmoil.

What the poem says

Cītai is described as if crafted by the creator: her voice from music, her lips from coral, her body from every beauty known in women, and her character from countless noble virtues. Irāvaṇaṉ gazes at her with all his twenty eyes, intending to throw her into distress.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇkaḷāl kiḷavi ceytu, pavaḷattāl ataram ākki,
peṇkaḷ āṉārkkuḷ nalla uṟuppu elām perukki īṭṭi
eṇkaḷāl aḷavu ām māṉak kuṇam tokuttu iyaṟṟiṉāḷai,
kaṇkaḷāl arakkaṉ kaṇṭāṉ, avaḷai ōr kalakkam kāṇpāṉ.