கம்பராமாயணம் 7685 · யுத்த 16.9

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அடியனேனுக்கு இரங்குவது என்றுதான் - அடியேன் ஆகிய என் பொருட்டு (சீதையே) நீ மனத்தில் இரக்கம் கொள்வது என்று தான்? என்பால் இரவியோடு இந்து என்பான் வேற்றுமை தெரிவது என்றுதான் - என்னிடம் கதிரவனுக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள வேறுபாடு அறியத் தோன்றும் நிலை என்றுதான்; அனங்க வாளிக்கு - உருவமற்ற மன்மதனின் மலரம்புகளுக்கு; இலக்கு அலாதிருக்கலாவது என்று தான் - இலக்கு ஆகாமல் இருக்கல் ஆவது என்றுதான்? என்று - என்று; தான் உற்றது எல்லாம் - தான் அடைந்த காம வருத்தங்களை எல்லாம்; இயம்புவான் எடுத்துக் கொண்டான் - சொல்வதற்காக எடுத்துக் கொண்டான்.

காம வயப்பட்டவர்க்கு நிலவும் வெப்பமாய்த் தோன்றும் என்ற மரபினை மனங்கொண்டு இந்துவோடு இரவி என்பான் வேற்றுமை தெரிவது என்று என்றார். என்றுதான் என்ற தொடர் இராவணனின் காம மிகுதி சார் எதிர்பார்ப்பைக் காட்ட நான்கு முறை வந்துள்ளது. தான் - நான்கனுள் முதல் மூன்று அடிகளில் வருபவை அசை நான்காம் அடியில் வருவது - படர்க்கை ஒருமைப் பெயர்ச்சொல். உற்றது எல்லாம் - ஒருமை பன்மை மயக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When will you take pity on me, your slave? When will the difference
  2. between the one called the moon and the sun be clear to me?
  3. When can I cease to be the target of the bodiless god's arrows?'
  4. So saying, he began to tell all that he had suffered.

What the poem says

Irāvaṇaṉ pleads with Cītai like a lovesick suitor. Love-sickness, by poetic convention, makes even the cool moon burn like the sun; he asks when the moon will feel like the moon again, and when he will be free of the flower arrows of Kāmaṉ, the bodiless god of love.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṉṟutāṉ, aṭiyaṉēṉukku iraṅkuvatu? intu eṉpāṉ
eṉṟutāṉ, iraviyōṭum vēṟṟumai terivatu eṉpāl?
eṉṟutāṉ, aṉaṅka vāḷikku ilakku alātirukkalāvatu?
eṉṟu, tāṉ uṟṟatu ellām iyampuvāṉ eṭuttuk koṇṭāṉ