கம்பராமாயணம் 7689 · யுத்த 16.13

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஈசனே முதலா மற்றை மானுடர் இறுதி யாரும்
கூச, மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன்; வீரக் கோட்டி
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென்; பெண்பால் வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால், ஆண்மைதான் மாசு உணாதோ?

பொருள் · Meaning in Tamil

ஈசனே முதலா - சிவபிரானை முதலாகக் கொண்டு; மற்றை மானிடர் இறுதி ஆகக் கூச - மற்று மானிடர் வரை உள்ள அனைவரும் அஞ்சும்படி; மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் - மூன்று உலகத்தையும் காக்கும்படி வெற்றி படைத்த நான்; வீரக்கோட்டி பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் - வீரர் வரிசையில் பேசப்படுபவர் எவருக்கும் உயிர் தோற்றிலென்; பெண்பால் வைத்த ஆசை நோய் கொன்றது என்றால் - அத்துணை வீர வலியுடைய என்னைப் பெண்ணிடம் வைத்த காம நோய் கொன்று விட்டது என்றால்; ஆண்மை தான் மாசுணாதோ - (உலகில்) வீர ஆண்மை குற்றப்படும் அல்லவா?

"ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும்என் பீடு"

என்ற குறள் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. (குறள் 1088). பேசுவார் என்பது நோக்கி ஒருவர் என்ற பாடம் கொள்ளப்பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I, of conquering might, who rule the three worlds so that from Īcaṉ
  2. down to the last of men all shrink in fear, have never lost my life
  3. to any of those named in the ranks of heroes; if the sickness of desire
  4. for a woman kills me, will not manhood itself be stained?'

What the poem says

Irāvaṇaṉ boasts that he has terrified everyone from Civaṉ down to the lowest mortal and never been beaten by any hero. If love for a woman should kill him, manhood itself will be disgraced. The commentary compares a Kuṟaḷ couplet in which a warrior laments that his valour has collapsed before a woman's bright brow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘īcaṉē mutalā maṟṟai māṉuṭar iṟuti ākak
kūca, mūṉṟu ulakum kākkum koṟṟattēṉ; vīrak kōṭṭi
pēcuvār oruvarkku āvi tōṟṟileṉ; peṇpāl vaitta
ācai nōy koṉṟatu eṉṟāl, āṇmaitāṉ mācuṇātō?