கம்பராமாயணம் 7690 · யுத்த 16.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நுணங்கி நின்று உணங்கும் ஆவி - குறைந்து நின்று வாட்டமுறுகின்ற என் உயிர்; நோயினை நுகரவேயும் - காமநோயை நுகர்ந்து கொண்டிருக்கும் போதும்; நாள் பல கழித்த காலை - அந்நோயோடு பல நாளைக் கழிக்கும்போது; நாய் உயிர் ஆகும் அன்றே - நாயின் உயிர் என்று இழித்துக் கூறப்படும் நிலைக்கு ஆள் ஆகும் அல்லவா? பாயிரம் உணர்ந்த நூலோர் - நூலின் வரலாறு கூறும் பாயிரப் பகுதியை ஓதி உணர்ந்த நூல் வல்லோர்; காமத்துப் பகுத்த பத்தி - காமப்பகுதியில் ஏற்படுத்திய அவத்தை வரிசை; ஐ இரண்டு என்பர் பொய்யே - பத்து என்று கூறுவார்கள் அது பொய்யே; ஆயிரம் அல்லபோன - ஆயிரம் என்று கூற முடியாமல் அதையும் கடந்து போயின.
இப்பாடல் சாக்காடு என்னும் அவத்தையைக் கூறுகிறது என்பர் வை. மு.கோ. பாயிரம் - நூலின் வரலாறு, காமத்துப் பகுத்த பத்தி. காமப் பகுதியில் பகுத்த அவத்தை வரிசை ஐ - இரண்டு பத்து. அவையாவன காட்சி, வேட்கை, உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Even while I bear this sickness, my life, wasting and withering,
- becomes a dog's life, does it not, as many days pass?
- Scholars versed in the treatises say the stages they marked out for love
- are twice five; that is false; they are not a thousand, they have gone beyond.'
What the poem says
Irāvaṇaṉ says his long love-sickness has made his life as worthless as a dog's. Poetic manuals list ten stages of love, from first sight through longing, wasting and madness to death. He has passed far beyond ten, beyond even a thousand.