கம்பராமாயணம் 7691 · யுத்த 16.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அறந்தரும் செல்வம் அன்னீர் - அறவழியில் கிடைத்த செல்வத்தை ஒத்துள்ளவரே! அமிழ்தினும் இனியீர் - அமிழ்தத்தைக் காட்டிலும் இனிமை வாய்ந்தவரே! என்னைப் பிறந்திலன் ஆக்க வந்தீர் - என்னைப் பிறக்காதவன் போல் செய்ய வந்தவரே! பேர் எழில் மானம் கொல்ல - நுமது பேரழகு என் மானத்தை அழிக்க; பெரிய மறந்தன போன - நான் செய்த பெருஞ்செயல்கள் மறந்து விட்டன; வரும் எனும் மருந்து தன்னால் - நீர் இரங்கும் நாள் வரும் என்னும் மருந்தினால்; யான் இறந்து இறந்து உய்கின்றேன் - யான் செத்துச் செத்துப் பிழைக்கின்றேன்; யார் இது தெரியும் ஈட்டார் - எனது இந்தத் தன்மையை அறியும் தன்மையுடையவர் யார்?
நீர் மனம் இரங்கி எனக்கு அருள் தர வேண்டும் என்கிறான் இராவணன். பெரிய - பெருஞ்செயல்கள் போன - மறந்து விட்டன. பேர் எழில் மானம் கொல்ல பெரிய மறந்தன போன என இயைக்க. இறந்து இறந்து - அடுக்குத்தொடர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You who are like wealth won through dharma! Sweeter than nectar! You have come
- to make me as one never born; as your great beauty kills my pride,
- my great deeds are forgotten and gone; by the medicine called hope,
- I die and die and live again; who can understand this?'
What the poem says
Irāvaṇaṉ calls Cītai precious as rightly earned wealth and sweeter than nectar, yet she is erasing him: her beauty destroys his pride and makes him forget all his great deeds. Only the hope that she will one day relent keeps him alive, dying and reviving over and over.