கம்பராமாயணம் 7693 · யுத்த 16.17

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று உரைத்து, எழுந்து சென்று, அங்கு, இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தாலும் நேராக் குவவுத் தோள் நிலத்தைக் கூட,
மின்திரைத்து அருக்கன் தன்னை விரித்து மீன் தொகுத்தது ஒன்று
நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான்.

பொருள் · Meaning in Tamil

என்று உரைத்து - என்று பலவாறு சொல்லி; அங்கு எழுந்து சென்று - அங்கு எழுந்து போய்; இருபது என்று உரைக்கும் - இருபது என்று சொல்லப்படுகிற; நீலக்குன்று உரைத்தாலும் - நீல நிற மலையை உவமை சொன்னாலும்; நேரா - ஒவ்வாத; குவவுத்தோள் நிலத்தைக்கூட - திரண்ட தோள்கள் நிலத்தைத் தடவ; மின் திரைத்து - மின்னலைச் சுருட்டி; அருக்கன் தன்னை விரித்து - கதிரவன் தன்னை ஒளி பரப்புமாறு வைத்து; மீன் தொகுத்த போலும் - மீன் ஒரு திரளாகத் தொகுத்து வைத்து; நின்று இமைக்கின்றது அன்ன - நிலைத்து நின்று ஒளியை வெளிப் படுப்பது போன்ற; முடி படி நெடிதின் வைத்தான் - மெளலியை நிலத்தின் மீது வெகுநேரம் வைத்தான்.

மகுடத்தின் பேரொளி அருக்கன் தன்னை விரித்தது போலவும் அம் மகுடத்தில் உள்ள மணிகளின் ஒளி மின் திரைத்தது போலவும் இருந்தது என்க. திரைத்து - சுருட்டி, படி - நிலம். நெடிதின் - நீண்ட நேரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So saying, he rose and went there, and laying his massed arms, twenty in number,
  2. which even blue mountains could not match, upon the ground,
  3. he set his crown, which shone steadily as if lightning had been rolled up, the sun spread out
  4. and the stars gathered together, upon the earth for a long time.

What the poem says

Irāvaṇaṉ prostrates himself before Cītai: his twenty arms, mightier than blue mountains, lie on the ground, and his crown, blazing like coiled lightning, the spreading sun and clustered stars, rests long on the earth at her feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu uraittu, eḻuntu ceṉṟu, aṅku, irupatu eṉṟu uraikkum nīlak
kuṉṟu uraittālum nērāk kuvavut tōḷ nilattaik kūṭa,
miṉ tiraittu arukkaṉ taṉṉai virittu mīṉ tokutta pōlum
niṉṟu imaikkiṉṟatu aṉṉa muṭi paṭi neṭitiṉ vaittāṉ.