கம்பராமாயணம் 7694 · யுத்த 16.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மெல்லியல் - மெத்தென்ற சாயலை உடைய சீதை; (இராவணனைத் தன் அருகே பார்த்து) வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று - புலியைத் தன் பக்கத்தில் கண்ட மான் போலக் கலக்கம் அடைந்து; ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள் - உடம்பு முழுவதும் நடுங்கி விம்மிப் புலம்பி; கொல்லியவரினும் - என்னை அவன் கொல்லும் படிக்கு வந்தாலும்; உள்ளம் தெரியக் கூறுவென் என்னா - என் மனதில் உள்ள கருத்தை நன்றாக அறியும்படி கூறுவேன் என்று எண்ணி; கிடந்தது புல்லிய ஒன்றை - அருகில் தரையில் கிடந்த புன்மையான (துரும்பு) ஒன்றை; நோக்கினள் புகல்வதானாள் - நோக்கிக் கூறலானாள்.
இராவணனுடன் பேசுவது தன் கற்புத் திண்மைக்கு இழுக்கு எனக் கருதிச் சீதை துரும்பைப் பார்த்துப் பேசுகிறாள். “ஒரு துரும்பை விடத் தாழ்ந்து விட்டாய்” என்பதால் அவ்வாறு துரும்பைப் பார்த்துப் பேசினாள் எனலுமாம். நடுங்கினள், நோக்கினள் - முற்றெச்சங்கள். கொல்லிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினை எச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Shaken like a deer that sees a tiger at its side,
- the gentle one trembled in every limb and sobbed;
- thinking, 'Even if he comes to kill me, I will speak my mind plainly,'
- she looked at a blade of grass lying there and began to speak.
What the poem says
Cītai trembles like a deer facing a tiger, yet she decides to tell him exactly what she thinks, even if it costs her life. She will not look at him; she speaks while gazing at a blade of grass, both to avoid addressing him directly and, perhaps, to show he is worth less than a straw.