கம்பராமாயணம் 7695 · யுத்த 16.19

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 “
‘‘

பொருள் · Meaning in Tamil

பழி இது பாவம் என்று பார்க்கிலை - நீ செய்ய விரும்பிய செயலால் பழிவரும் பாவம் வரும் என்று எண்ணிப் பார்த்தாய் அல்லை; பகரத் தக்க மொழி இவை அல்ல - உம் போன்றவர் சொல்லத்தக்க சொற்கள் இவை அல்ல; என்பது உணர்கிலை - என்பதை நீ அறிந்தாய் அல்லை; முறைமை நோக்காய் - யாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற முறையையும் எண்ணிப் பார்த்தாய் அல்லை; கிழிகிலை நெஞ்சம் - இவ்வாறு முறையற்ற செயல் செய்தும் முறையற்ற சொல்லைச் சொல்லியும் கூட உன் நெஞ்சம் கிழிந்து பிளவுபடவில்லை; வஞ்சக் கிளையொடும் - உன் வஞ்சனைக்கு உதவும் சுற்றத்தவருடன்; இன்று காறும் அழிகிலை - இன்று வரை நீ அழியவில்லை; என்ற போது - என்றால்; என் கற்பு என் ஆம் - என் கற்பின் வலிமை என்ன ஆகும்? அறம் தான் என் ஆம் - அறம் தான் என்னவாகும்?

வாய் வந்தன சொல்லி, மனம் உவந்தன செய்யும் நீ முறைமை நோக்காது செயல்படுகிறாய், உன் நெஞ்சு கிழிபட, உறவினர் அழிந்தால் அன்றோ என் கற்பு பயன் பெற்றதாகவும், அறம் உலகில் மேம்பட்டதாகவும் ஆகும் என்கிறாள் சீதை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You do not see that this is shameful and sinful; you do not understand
  2. that these are not words fit to speak; you do not regard what is proper;
  3. your heart does not burst; if until today you have not perished
  4. with your deceitful kin, what becomes of my chastity? What becomes of dharma?'

What the poem says

Cītai rebukes Irāvaṇaṉ: he ignores sin and shame, speaks words no one of his rank should utter, and disregards all propriety. If he and his treacherous clan have not yet been destroyed for this, what power does her chastity have, and what is dharma worth?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“paḻi itu; pāvam “ eṉṟu pārkkilai; “pakarat takka
moḻi ivai alla ‘‘ eṉpatu uṇarkilai; muṟaimai nōkkāy;
kiḻikilai neñcam; vañcak kiḷaiyoṭum iṉṟukāṟum
aḻikilai eṉṟapōtu, eṉ kaṟpu eṉ ām? aṟamtāṉ eṉṉām?