கம்பராமாயணம் 7697 · யுத்த 16.21

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘வாசவன், மலரின் மேலான், மழுவலான் மைந்தன், மற்று அக்
கேசவன் என்ன நின்ற தன்மையோர் தன்மை கண்டாய்,
‘பூசலின் எதிர்ந்தேன் ‘என்றாய்; போர்க்களம் புக்கபோது என்
ஆசையின் கனியைக் கண்ணின் கண்டிலை போலும், அஞ்சி.

பொருள் · Meaning in Tamil

வாசவன் - இந்திரன்; மலரின் மேலான் - தாமரை மலரில் வீற்றிருப்பவனாகிய பிரமன்; மழுவலான் மைந்தன் - மழுப்படையை உடைய சிவபிரான் மகனாகிய முருகவேள்; கேசவன் சிறுவர் என்ற - மற்றும் கேசி என்ற அசுரனை அழித்த கேசவன் பிரமன் சிவன் என்ற; இந்தத் தன்மையோர் தம்மைக் கேளாய் - இந்தப் பெருமை பெற்றவர்களின் பேராற்றலைக் கேட்டிடாமல், (கவலை கொள்ளாமல்) பூசலின் எதிர்ந்தேன் என்றாய் - அவர்களைப் பெரும் போரில் எதிர்த்து வென்றேன் என்கிறாய்; என் ஆசையின் கனியை - என் பேர் ஆர்வத்தில் முதிர்ந்த பழம் போன்ற இராமனை; போர்க்களம் புக்க போது - போர்க்களம் புகுந்த வேளையில்; அஞ்சிக் கண்ணின் கண்டிலை போலும் - அஞ்சிக் கண்ணால் காணவில்லை போலும்.

கண்ணின் கண்டிலை போலும் - அவனைக் கண்ணால் கண்டிருந்தால் உனக்கு நல்லறிவு வந்திருக்கும், (அல்லது) அவன் அம்பால் மாண்டு போய் இருப்பாய், அவ்வாறு கண்ணால் காணாததால் தான் நீ உயிரோடு இருந்தும் நல்லறிவு பெறாது (அ) இறந்து படாது வாய் தரத் தக்க சொல்லி நிற்கிறாய். ஆசையின் கனி - பேரார்வத்தின் முதிர்ந்த கனி; ஈண்டு இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Vācavaṉ, the one upon the flower, the son of him who bears the axe, and Kēcavaṉ
  2. and his sons, without heeding what such as these are,
  3. you said, "I faced them in battle"; it seems that when you entered the field
  4. you did not see with your eyes the fruit of my longing, for fear.'

What the poem says

Irāvaṇaṉ has boasted of defeating Intiraṉ (Vācavaṉ), Piramaṉ on his lotus, Murukaṉ son of axe-bearing Civaṉ, and Vishnu (Kēcavaṉ). Cītai retorts that he must have been too frightened to look at Irāmaṉ, the ripe fruit of her longing, on the battlefield; had he truly seen him, he would have learned wisdom or died.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vācavaṉ, malariṉ mēlāṉ, maḻuvalāṉ maintaṉ, maṟṟu ak
kēcavaṉ ciṟuvar eṉṟa intat taṉmaiyōrtammaik kēḷāy,
‘pūcaliṉ etirntēṉ ‘eṉṟāy; pōrkkaḷam pukka pōtu eṉ
ācaiyiṉ kaṉiyaik kaṇṇiṉ kaṇṭilai pōlum, añci.