கம்பராமாயணம் 7700 · யுத்த 16.24

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘எனக்கு உயிர் பிறிது ஒன்று உண்டு என்று எண்ணலை; இரக்கம் அல்லால்
தனக்கு உயிர் வேறு இன்றாகி, தாமரைக் கண்ணது ஆகி,
கனக் கருமேகம் ஒன்று கார்முகம் தாங்கி, யார்க்கும்
மனக்கு இனிது ஆகி, நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய்!

பொருள் · Meaning in Tamil

வரம்பிலாதாய் - நெறிமுறை வரம்புக்கு உட்படாதவனே; தனக்கு உயிர் இரக்கம் அல்லால் வேறு இன்றாகி - தனக்கு உயிர் என்பது கருணை அல்லால் வேறு ஒன்றும் இல்லாமல்; தாமரைக் கண்ணது ஆகி - தாமரை போன்ற கண்களை உடையதாக; கனக்கருமேகம் ஒன்று - மிகக் கறுத்த மேகம் ஒன்று; கார்முகம் தாங்கி - வில்லைத் தாங்கி; ஆர்க்கும் மனக்கு இனிது ஆக நிற்கும் - யாவருடைய மனத்துக்கும் இனிமை தருவது ஆகி நிற்கின்ற; அஃது அன்றி - அந்த (இராமன் என்கிற) பொருள் அன்றி; எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் - எனக்கு வேறு உயிர் ஒன்று உண்டு என எண்ணி இராதே. சீதை தனக்கு உயிர் இராமபிரானே என்கிறாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Do not think there is any other life for me than this: one whose own life is nothing
  2. but compassion, with lotus eyes,
  3. a single dense dark cloud that holds a bow, standing
  4. sweet to every mind — other than that, you who know no bounds!”

What the poem says

Cītai ends her reply by saying that her life is Irāmaṉ alone. She pictures him as a dark rain cloud bearing a bow, lotus-eyed, whose very life is compassion and who delights every heart. She calls Irāvaṇaṉ “you who have no bounds”, a man who respects no limit of right conduct, and tells him not to imagine she has any life apart from Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṉakku uyir piṟitum oṉṟu uṇṭu eṉṟu irēl; irakkam allāl
taṉakku uyir vēṟu iṉṟāki, tāmaraik kaṇṇatu āki,
kaṉak karu mēkam oṉṟu kārmukam tāṅki, ārkkum
maṉakku iṉitu āki, niṟkum aḵtu aṉṟi varampu ilātāy!