கம்பராமாயணம் 7701 · யுத்த 16.25

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்றனள் - (என்று சீதை கூறி முடித்தாள்; என்றலோடும் - அவ்வாறு சொன்ன அவ்வளவிலே; எரி உகு கண்ணன் - நெருப்பு வெளிப்படும் கண்களை உடையவனாய்; தன்னைக் கொன்றன மானம் தோன்ற - தன்னைக் கொன்றது போன்ற மான உணர்ச்சி மிக்குத் தோன்ற; கூற்று எனச் சீற்றம் கொண்டான் - இயமன் போலக் கோபம் கொண்டவனாய்; எனை வென்று இராமன் உன்னை மீட்ட பின் - (சீதையை நோக்கி) என்னை வென்று இராமன் உன்னை மீட்ட பிறகு; அவனோடு ஆவி ஒன்று என வாழ்தி போல் என்று - அந்த இராமனோடு உயிர் ஒன்றாகியது என்று கூறுமாறு வாழ்வாய் போலும் என்று; இடி உரும் ஒக்க நக்கான் - பேரிடியின் ஒலி போல் (பேரொலி உண்டாகுமாறு) கேலியாகச் சிரித்தான்.

நடக்கமுடியாத செயலை நடக்கும் என்று நினைக்கிறாயே என எண்ணிச் சிரித்தனன். போல் - ஒப்பில் போலி, இடி உரும் - ஒரு பொருட்பன்மொழி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So she spoke; and as she spoke, he, with eyes that shed fire,
  2. as wounded pride that felt like death rose in him, grew wrathful like Death itself:
  3. “After Irāmaṉ has conquered me and won you back, you mean to live with him
  4. as one life, it seems!” he said, and laughed like the crash of thunder.

What the poem says

Cītai's words strike Irāvaṇaṉ's pride like a death blow. Fire flashes from his eyes and he becomes as furious as Yama, god of death. He mocks her hope of being rescued and living as one with Irāmaṉ, and breaks into a laugh as loud as a thunderclap, sneering at what he thinks can never happen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟaṉaḷ; eṉṟalōṭum, eri uku kaṇṇaṉ, taṉṉaik
koṉṟaṉa māṉam tōṉṟa, kūṟṟu eṉac cīṟṟam koṇṭāṉ,
‘veṉṟu eṉai, irāmaṉ uṉṉai mīṭṭapiṉ, avaṉōṭu āvi
oṉṟu eṉa vāḻtipōl ‘eṉṟu, iṭi urum okka nakkāṉ.