கம்பராமாயணம் 7703 · யுத்த 16.27

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘

பொருள் · Meaning in Tamil

இளைத்த நுண் மருங்குல் நங்காய் - சிறுத்து நுண்மையான இடையை உடைய பெண்ணே! குரங்கு மதிலை வளைத்தன - குரங்குகள் இலங்கை மதிலை வளைத்தன; வேலை வரம்பு வகுத்தன - அதற்காகக் கடலில் சேதுவைக் கட்டின; வாயால் பல்கால் உளைத்தன - வாயால் பலமுறை உரப்பிப் பேரொலி செய்தன; என்று அகம் உவந்தது உண்டேல் - என்று (நீ மனம் மகிழ்ந்தது உண்டானால்; வியக்க வேண்டா - அதற்காக வியப்புக் கொள்ள வேண்டாம்; என் எதிர் எய்திற்று எல்லாம் - என் எதிர் வரும் (அக்குரங்குகள் எல்லாம்; விளக்கு எதிர் வீழ்ந்த விட்டில் பான்மைய - விளக்குக்கு முன்னே (இரண்டு வந்து) வீழ்ந்த விட்டில் பூச்சியின் தன்மையனவாம்.

விளக்கில் விட்டில் பூச்சி தானே வந்து விழுந்து இறக்குமாறு போலப் போர்க்களத்தில் குரங்குகள் என்னைக் கண்ட மாத்திரத்து இறக்கும் என்கிறான். வரம்பு - எல்லை (சேது) உளைத்தல் - உரப்பிப் பேரொலி செய்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “That they have surrounded the walls, that they have built a causeway across the sea, that with their mouths
  2. the monkeys have roared many times — if your heart has rejoiced at that,
  3. O lady with a slender, wasted waist, all that comes before me
  4. is like moths that fall into a flame: do not marvel at it.”

What the poem says

Irāvaṇaṉ dismisses the achievements of Irāmaṉ's monkey army: they have bridged the sea, encircled Ilaṅkai's walls and roared their challenge. If Cītai takes heart from this, he says, she is mistaken. Whatever comes against him is like moths flying into a lamp, destroyed the moment they meet him in battle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“vaḷaittaṉa matilai, vēlai vakuttaṉa varampu, vāyāl
uḷaittaṉa kuraṅku palkāl ‘‘ eṉṟu akam uvantatu uṇṭēl,
iḷaitta nuṇ maruṅkul naṅkāy! eṉ etir eytiṟṟu ellām
viḷakku etir vīḻnta viṭṭil pāṉmaiya; viyakka vēṇṭā.