கம்பராமாயணம் 7705 · யுத்த 16.29

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

என்று அவன் உரைத்த காலை - என்று அந்த இராவணன் சொன்ன உடன்; என்னை இம்மாயம் செய்தாற்கு - என்னை இப்படிப்பட்ட மாயம் செய்து சிறையில் வைத்த இவ்விராவணனுக்கு, ஒன்றும் இங்கு அரியது இல்லை - ஒன்றும் இங்குச் செய்தற்கு அரிய செயலென்பது இல்லை; என்பது - என்று எண்ணியதால்; ஓர் துணுக்கம் உந்த - ஒரு மன அச்சம் தூண்ட; நின்று நின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள் - திகைப்படைந்து நின்று நின்று பெருமூச்சு விட்டு மனம் கொதித்துப் போய்; நெருப்பை மீளத்தின்று தின்று உமிழ்கின்றாரின் - நெருப்பை மீண்டும் மீண்டும் தின்று தின்று உமிழ்கின்றவர்களைப் போல; துயருக்கே சேக்கை ஆனாள் - துன்பத்திற்குத் தங்குமிடம் ஆனாள்.

இம்மாயம் செய்தாற்கு - மாரீசனை மாயமானாக அனுப்பிக் கிழ வேடத்தில் தன்னை நிலத்தொடும் கொண்டு வந்த செயல், துணுக்கம் - மன அச்சம், சேக்கை - இருப்பிடம், நிலைக்களன். நின்று நின்று, தின்று தின்று - அடுக்குத் தொடர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he spoke so, “For one who has worked this deceit on me,
  2. nothing here is impossible” — with that thought a dread drove her on,
  3. she stood and stood, sighing, her heart burning, and like those who again and again
  4. swallow fire and spit it out, she became a resting place for sorrow alone.

What the poem says

Cītai remembers how Irāvaṇaṉ tricked her before, sending Mārīcaṉ as a golden deer and coming to her disguised as an old ascetic, then carrying her off with the very ground she stood on. A man capable of that, she fears, can do anything. She sighs over and over, her heart scorched, like someone forced to swallow fire and spit it out again and again; she becomes the home of grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu avaṉ uraittakālai, ‘eṉṉai im māyam ceytāṟku
oṉṟum iṅku ariyatu illai ‘ eṉpatu ōr tuṇukkam unta,
niṉṟu niṉṟu uyirttu neñcam vetumpiṉāḷ, neruppai mīḷat
tiṉṟu tiṉṟu umiḻkiṉṟāriṉ, tuyarukkē cēkkai āṉāḷ.