கம்பராமாயணம் 7706 · யுத்த 16.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கண்ணின் வெள்ள நீர்க்கரை இலாதாள் - கண்ணில் இருந்து வெள்ளமாகப் பெருகுகின்ற கண்ணீருக்குக் கரை காணாதவளாகிய சீதை; இத்தலை இன்ன செய்த விதியினார் - எனக்கு இவ்விடத்து இப்படிப்பட்ட செயலைச் செய்த விதியினார்; என்னை இன்னும் அத்தலை அன்ன செய்யச் சிறியரோ? - எனக்கு அவ்விடத்து அப்படிப்பட்ட செயலைச் செய்யச் சிறியவரோ; வலியர் அம்மா - வலிமை உடையவர் பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும் என்னா - பொய்ச் செயல்களைக் கொண்டிருப்பது எல்லாம் தற்போது அறமாகத் தோன்றுகிறது என்று மனதில் எண்ணி; உள்ளம் கைத்தனள் - மன வெறுப்புக் கொண்டாள்.
கைத்தனள் - வெறுத்தனள், உடையது எல்லாம் - ஒருமை பன்மை மயக்கம், அம்மா - அசை விதியினார் சிறியரோ வலியர் எனக் கூட்டுக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Fate, which did such things to me here, would it be too small
- to do the like to me there as well? It is mighty indeed!
- All that is falsehood, it seems, is now righteousness” — so saying,
- she grew bitter at heart, she who could find no shore to the flood of tears from her eyes.
What the poem says
Weeping endlessly, Cītai reflects that the fate which has made her suffer here in Ilaṅkai could just as easily bring the same disaster to her family in Ayōttī and Mithilā. Fate is strong, not small. In despair she feels that the world has turned upside down, so that deceit now passes for dharma, and her heart grows bitter.