கம்பராமாயணம் 7708 · யுத்த 16.32

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொய் என உணராள் - (மகோதரன் பற்றி வந்தவன் மாயா சனகன் என்ற) பொய்த் தன்மையை அறியாதவள் ஆகிய சீதை; கைகளை நெரித்தாள் - தன் கைகளை நெரித்தாள்; கண்ணில் மோதினாள் - கைகளைக் கண்களில் மோதிக் கொண்டாள்; கமலக் கால்கள் - தாமரை மலர் போன்ற பாதங்கள்; நெய்யெரி மிதித்தாலென்ன நிலத்திடைப் பதைத்தாள் - நெய் ஊற்றி எரிக்கப் பட்ட தீயை மிதித்தது போல் நிலத்தின் மீது இருக்க முடியாமல் துடித்தாள்; நெஞ்சம் மெய் என எரிந்தாள் - மனம் உடல் போல வேக்காடு எய்தினாள்; ஏங்கி விம்மினாள் - ஏக்கம் கொண்டு புலம்பினாள்; நடுங்கி வீழ்ந்தாள் - உடல் நடுங்கிக் கீழே விழுந்தாள்; அன்பால் புரண்டனள் - (தன் தந்தை மீது கொண்ட) பாசத்தால் புரண்டாள்; பூசலிட்டாள் - பேரொலி எழுப்பிக் கதறினாள்.

கமலக் கால்கள் - உவமைத்தொகை. கைகளை நெரித்தல் போன்றன துயரத்தால் எழுந்த செயல்கள். இப்பாடலில் அவலச்சுவை விளங்குதல் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She wrung her hands; she beat them against her eyes; on her lotus feet,
  2. as if she had trodden on fire fed with ghee, she writhed upon the ground; her heart
  3. burned as her body burned; she pined and sobbed; trembling, she fell;
  4. not knowing it was false, out of love she rolled on the earth and cried aloud.

What the poem says

Not knowing that the captive is an illusion, Cītai is overwhelmed by grief for her father. She wrings her hands and strikes her eyes, cannot stay still on the ground as if it were fire fed with ghee, burns in heart and body, sobs, trembles, falls and rolls on the earth crying aloud. The verse piles up the outward signs of anguish, and its mood is pathos.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaikaḷai nerittāḷ; kaṇṇil mōtiṉāḷ; kamalak kālkaḷ
ney eri mitittāleṉṉa nilattiṭaip pataittāḷ; neñcam
mey eṉa erintāḷ; ēṅki vimmiṉāḷ; naṭuṅki vīḻntāḷ;
poy eṉa uṇarāḷ aṉpāl, puraṇṭaṉaḷ, pūcaliṭṭāḷ.