கம்பராமாயணம் 7709 · யுத்த 16.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தெய்வமோ என்னும் - (அச்சீதை) தெய்வமே என்பாள்; மெய்ம்மை சிதைந்ததோ என்னும் - உண்மை அழிந்து விட்டதோ என்பாள்; உலகை தீயவைவலோ என்னும் - உலகத்தைத் தீய்ந்து போகும்படி சபித்து விடட்டுமா என்பாள்; வஞ்சமோ வலியது என்னும் - (உலகில்) வஞ்சகச் செய்கையே வலிமையானது என்பாள்; இன்னம் உய்வலோ என்னும் - இன்னும் உயிரோடு பிழைத்திருப்பேனோ என்பாள்; ஒன்று அல துயரம் உற்றாள் - ஒரு தன்மைத்தாக அன்றிப் பல வகையில் துன்பம் அடைந்தாள். தையலோ - (இவ்வாறு துன்புற்றது) பெண்ணோ; தருமமேயோ - அல்லது அறந்தானோ? அவள் தன்மை தேர்வார் யார் - அச் சீதையின் நிலையை ஆய்ந்து அறிபவர் யாவர்.
தீய - தீய்ந்து போகும்படி, வைதல் - சபித்தல். ஈற்றடி கவிக்கூற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “O god!” she cries; “has truth been destroyed?” she cries; “shall I curse
- the world to burn?” she cries; “is treachery the stronger?” she cries;
- “shall I live on still?” she cries; she suffered sorrow not of one kind alone;
- was it a woman? was it dharma itself? who could tell what she was?
What the poem says
Cītai's cries pour out in short questions: she calls on the gods, asks whether truth has perished, wonders whether she should curse the world to burn, whether deceit is stronger than right, whether she can go on living. In the last line the poet steps in to ask whether it was a woman suffering, or dharma itself in her form, for no one could fathom her state.