கம்பராமாயணம் 771 · பால 12.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மால்ஆடகம் வரை - பெரிய பொன் மலையை; அன்னது தன்னை - ஒத்தாகிய அச்சிவ வில்லை; தேட அரு - தேடுதற்கரிய; மாமணி - சிறந்த இரத்தினம் போன்றவளும்; சீதை எனும் - சீதை எனப்படுபவளுமான; பொன்சூடகம் - பொன்னாலாகிய சூடகம் என்ற; வால்வளை சூட்டிட - கை வளையலையணிந்த நங்கைக்குச் சூட்டும் பொருட்டு; நீட்டும் - நீட்டுதற்கு உரிய; ஏடு அவிழ்மாலை - மலர்ந்த பூமாலையே; என்ன - என்று எண்ணுமாறு; எடுத்தான் - எளிதாகத் தூக்கி எடுத்தான்.
சிவதனுசை இராமன் எடுத்தது சீதையை மணத்தற்குக் காரணமாவதால் அதைச் சீதைக்குச் சூட்டுதற்காக நீட்டும் மாலை போலும் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That bow, like a great mountain of gold,
- he lifted as though, for the gem beyond all seeking, the gold called Cītai,
- she of the bright golden bangles, it were held out to crown her:
- a garland of opening petals.
What the poem says
Irāmaṉ picks up the bow, huge as a golden mountain, as easily as if it were a garland of fresh flowers he was holding out to place on Cītai.
The image is apt because lifting the bow is the very act that will win her: in taking it up he is, in effect, offering her the wedding garland.