கம்பராமாயணம் 772 · பால 12.34

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தடுத்து இமையாமல் இருந்தவர், தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்,
கடுப்பினில் யாரும் அறிந்திலர், கையால்
எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்.

பொருள் · Meaning in Tamil

தடுத்து இமையாமல் - கண் கொட்டுவதைத் தடுத்து இமையாதபடி, இருந்தவர் யாரும் - (நிகழ்வதை) பார்த்து நின்ற அவையோர் யாவரும்; தாளில் மடுத்ததும் - (இராமன்) தன் திருவடியால் அவ்வில்லின் முனையை மிதித்ததையும்; நாண் நுதி வைத்ததும் - (அதை வளைத்து) மற்ற முனையில் நாண் ஏற்றியதையும்; கடுப்பினில் - (செயலின்) வேகத்தால்; நோக்கார் - காணமுடியாதவராயினர்; அறிந்திலர் - அன்றியும் மனத்தாலும் இன்னது தான் நிகழும் என்று கருதவும் இயலாதவர் ஆகினர்; கையால் எடுத்தது - (ஆயினும்) இராமன் தன் கையால் (அவ் வில்லை) எடுத்ததை; கண்டனர் - பார்த்தார்கள்; இற்றது கேட்டார் - (அந்தவில்) முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்.

கண் இமை கொட்டினால் இராமன் வில்லையெடுத்து நாணேற்றுவதைக் காணாமற்போய் விடுவோம் என்று கண் கொட்டாது பார்த்தவர்களும் அந்த இராமன் வில்லை எடுத்ததையும், அது முறிந்த ஓசையையும் கேட்டனரே அல்லாமல் அதை நாணேற்றியதைக் காண முடியாதவராயினர் என்பது. இற்றது - இறுதலால் தோன்றிய ஒலி

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who sat there holding back their blinking never saw
  2. him press it down with his foot, nor fix the string at its tip;
  3. so swift it was that no one grasped it; they saw him
  4. lift it with his hand, and they heard it break.

What the poem says

This is one of the most celebrated verses of the epic. Everyone in the hall stares without blinking so as not to miss a moment, yet the action is so fast that no one sees Irāmaṉ plant his foot on the bow's end and draw the string to the other tip.

All they witness is the lift and then the crack of the bow snapping. Kampaṉ conveys speed by leaving out the middle of the action, exactly as the spectators missed it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṭuttu imaiyāmal iruntavar, tāḷil
maṭuttatum nāṇ nuti vaittatum nōkkār,
kaṭuppiṉil yārum aṟintilar, kaiyāl
eṭuttatu kaṇṭaṉar, iṟṟatu kēṭṭār.