கம்பராமாயணம் 773 · பால 12.35

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அமரர்கள் - (வில் முறிந்த ஓசையைக் கேட்ட) தேவர்கள்; கமலத்தோன்தன் - பிரமன் படைத்த; பேருடை அண்ட கோளம் - பெரிய அண்ட கோளமே; பிளந்தது என்று - பிளந்து விட்டது என்று கருதி; ஏங்கி - ஏக்கம் கொண்டு; ஆர் இடை - இனி எவரிடத்தில், நாம் புகுதும் என்று - நாம் அடைக்கலம் புகுவோம் என்று; நைந்தார் - வருந்தினார்கள்; பார் இடை உற்ற - (விண்ணுலகமே இவ்வாறாயின்) இம் மண்ணுலகில் நிகழ்ந்த; தன்மை பகர்வது என் - தன்மை பற்றி நாம் சொல்ல வேண்டுவது என்ன உள்ளது?; பாரைத் தாங்கி - பூமியின் கீழ் அதைத் தாங்கிக் கொண்டு; வேர் எனக் கிடந்த - இந்தப் பூமியின் வேர்போலக் கிடக்கின்ற; நாகம் - ஆதிசேடன் என்னும் நாகமும்; இடி என - இடி (தன்மேல் விழுகின்ற தென்று; வெருவிற்று - கருதி அஞ்சுவதாயிற்று.

அவ் வில் இற்றதனால் தோன்றிய ஓசை விண், மண், பாதலம் என்னும் மூவுலகத்தார்க்கும் அச்சம் விளைத்தது என்பது. கமலத்தோன்தன் பேருடையண்டம் - பிரமாண்டம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'In whom shall we take refuge?' cried the gods; 'The great
  2. world-egg of the lotus-born has split!' and they pined in dread;
  3. what need to tell what befell the earth? The serpent that lies
  4. like a root bearing up the earth cowered as if from a thunderbolt.

What the poem says

The crack of the breaking bow terrifies all three worlds. The gods in heaven think the cosmic egg created by Piramaṉ, the lotus-born, has burst open, and wonder where they can now find shelter.

If heaven reacted so, the fright on earth needs no telling; even Āticēṭaṉ, the serpent who lies beneath the earth like its root and holds it up, flinches as though struck by lightning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āriṭaip pukutum nām?' eṉṟu amararkaḷ,' kamalattōṉtaṉ
pēruṭai aṇṭa kōḷam piḷantatu' eṉṟu, ēṅki naintār;
pāriṭai uṟṟa taṉmai pakarvatu eṉ? pārait tāṅki
vēreṉak kiṭanta nākam iṭi eṉa veruviṟṟu aṉṟē!