கம்பராமாயணம் 7712 · யுத்த 16.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று இன பலவும் பன்னி - என்று இவ்வாறான பல சொற்களைப் பலமுறை சொல்லி; எழுந்து வீழ்ந்து - (இருந்த இடம் விட்டு) எழுந்து (துன்பம் பொறுக்க முடியாமல் நிலத்தில்) விழுந்து; இடரில் தோய்ந்தாள் - பெருந்துன்பத்தில் மூழ்கி, பொன்றினள் போலும் என்னா - இறந்து விட்டாள் போலும் என்று (பார்த்தவர் கருதுமாறு); பொறை அழிந்து - (துன்பத்தைத்) தாங்கும் தன்மை அழிந்து; உயிர்ப்புப் போவாள் - பெருமூச்சு விடுபவளாய், தனி மின் நிலத்து வீழ்ந்து புரள்கின்றது அனைய மெய்யாள் - தனித்த மின்னலானது நிலத்தில் விழுந்து புரள்வதை ஒத்த உடம்பு உடையவளாய்; அன்றில் அம்பேடை போல - அன்றில் பறவையின் அழகிய பெண் பறவை போல; வாய் திறந்து அரற்றலுற்றாள் - வாய் விட்டுக் கதறத்தொடங்கினாள்.
பன்னுதல் - பலமுறை சொல்லுதல், தோய்தல் - மூழ்குதல், பொறை - தாங்கும் வலி, உயிர்ப்பு - பெருமூச்சு. இன - இடைக்குறை வால்மீகியும் அழுகின்ற சீதைக்குப் பெண் அன்றிலைப் பல இடங்களில் உவமை கூறுவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying these and many such things over and over, she rose and fell and sank in distress;
- so that one would say “she has died”, her endurance broken, gasping for breath,
- with a body like a lone lightning flash fallen to the ground and writhing,
- like a lovely female aṉṟil bird, she opened her mouth and began to wail.
What the poem says
Cītai repeats her laments, rises and falls again, and is so broken that onlookers might think her dead. Her body on the ground is likened to a flash of lightning fallen to earth and rolling there. She cries out like the female aṉṟil, a bird of poetry said to grieve when parted from its mate; Vālmīki too often compares the weeping Sītā to such a bird.