கம்பராமாயணம் 7713 · யுத்த 16.37

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘பிறையுடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இல் கடன்கள் செய்ய,
இறையுடை இருக்கை மூதூர் என்றும் வந்து இறுக்கலாதீர்,
சிறையிடைக் காண நீரும் சிறையொடும் சேர்ந்தவாறோ
மறையுடை வரம்பு நீங்கா வழிவந்த மன்னர் நீரே?

பொருள் · Meaning in Tamil

நீரே மறையுடைவரம்பு நீங்கா வழி வந்த மன்னர் - நீர் வேதமுறையின் எல்லை கடவாத கால்வழியில் வந்தவர்; பிறையுடை நுதலார்க்கு ஏற்ற - பிறை நிலவு போன்ற நெற்றியை உடைய பெண்களுக்கு ஏற்ற; பிறந்த இற்கடன்கள் செய்ய - பிறந்த வீட்டுக் கடமைகளைச் செய்வதற்குக் கூட; இறையுடை இருக்கை மூதூர் - (என்) தலைவனுடைய இருப்பிடமாகிய பழமையான ஊராகிய அயோத்திக்கு; என்றும் வந்து இருக்கலாதீர் - என்றைக்கும் வந்து தங்காது இருப்பவர் ஆனீர்; சிறையிடைக் காண - (அப்படிப்பட்ட நீர்) சிறையிடையில் (என்னைக்) காண்பதற்காக; நீரும் சிறையொடும் சேர்ந்தவாறோ - நீங்களும் சிறைக்குச் சேர்ந்த தன்மையோ? (இது)

சனகன் நாளும் அனலோம்பி வேள்வி செய்பவன் ஆதலின் தன் மகள் இருந்த ஊருக்குக் கூடச் செல்ல முடியாமல் தன் ஊரிலேயே இருந்தான் என்க. இறை - தலைவன் (இராமன்); மூதூர் - அயோத்தி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “To perform the duties of a bride's family that befit women with brows like the crescent moon,
  2. you never once came to stay in the ancient city that is my lord's dwelling,
  3. and now, to see me in prison, have you yourself come to join me in captivity,
  4. you, the king born in a line that never strays from the bounds of the Veda?”

What the poem says

Cītai reproaches her father tenderly. Bound by his daily sacrificial fires, he never left Mithilā to visit her in Ayōttī, her husband's ancient city, as a bride's family usually would. Yet now, she says bitterly, he has come to see her, and to see her in prison, as a prisoner himself. The irony sharpens her grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘piṟaiyuṭai nutalārkku ēṟṟa piṟanta iṟ kaṭaṉkaḷ ceyya,
iṟaiyuṭai irukkai mūtūr eṉṟum vantu irukkalātīr,
ciṟaiyiṭaik kāṇa nīrum ciṟaiyoṭum cērntavāṟō
maṟaiyuṭai varampu nīṅkā vaḻi vanta maṉṉar nīrē?