கம்பராமாயணம் 7717 · யுத்த 16.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நான் இருந்து - நான் இலங்கைச் சிறையில் உயிருடன் இருந்து; பகையை எல்லாம் - பகைவர்களை எல்லாம்; ஈறு கண்டு - அழிவடையுமாறு செய்தல் கண்டு, அளவு இல் இன்பம் பொருந்தினேன் அல்லேன் - அளவற்ற இன்பத்தை அடைந்தேன் அல்லன்; எம்கோன் - எமது தலைவனாகிய இராமனின்; திருவடி புனைந்தேன் அல்லன் - திருவடிகளை (தலையில் சூட்டினேனுமல்லன்; நெடுநாள் வருந்தினேன் - (சிறையில் பத்துத் திங்கள்) நீண்ட நாள் வருத்தப்பட்டேன்; உம்மை வழியொடு முடித்தேன் - உம்மைப் பரம்பரையோடும் அழியுமாறு செய்தேன்; அயோத்தி வந்த அரசர் தம் புகழை - அயோத்தியில் தோன்றி வந்த அரசர்களுடைய பெருமையை; வாயால் அருந்தினேன் அம்மா - (என்) வாயால் உண்டு விட்டேன்.
வாயால் அருந்தினேன் - தாய் தந்தையரை இழந்தவர்களைத் தாயைத் தின்றான். தந்தையைத் தின்றான். என்று கூறும் உலக வழக்குப் பற்றி வந்தது. வாயால் அருந்தினேன் என்பது - மாய மானைப் பற்றித் தருக என இராமனை வேண்டிய
"நாயக நீயே பற்றி நல்கலை போலும்"
என்ற பாடலையும் (கம்ப. 3303) மாயமானின் அபயக் குரல்கேட்டு இலக்குவனைக் கடிந்து கூறிய பாடலையும் (கம்ப. 3331) உள்ளடக்கிக் கூறியது எனலும் ஆம். அம்மா - வியப்பிடைச் சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “I did not live on to see all my enemies brought to an end and gain
- boundless joy; I did not wear on my head the holy feet of my lord;
- I suffered long days; I destroyed you together with your whole line; with my own mouth
- I have devoured the glory of the kings who came from Ayōttī, alas!”
What the poem says
Cītai laments that she has lived through ten months of captivity without seeing her enemies destroyed or bowing again at Irāmaṉ's feet. Instead, she feels, she has brought ruin on her father's line and has “eaten” the fame of Ayōttī's kings with her own mouth. The phrase echoes the folk saying that an orphan has “eaten” his parents. It may also recall her own words in the forest: when she begged Irāmaṉ to catch the golden deer, and when she spoke harshly to Ilakkuvaṉ after hearing its false cry for help.