கம்பராமாயணம் 7719 · யுத்த 16.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மேல்நாள் - முன்னொரு காலத்தில்; இணை அறு வேள்வி இயற்றி - ஒப்பற்ற பெரு வேள்வியைச் செய்து; ஈன்று எடுத்த தந்தை - (என்னைப்) பெற்றெடுத்து (வளர்த்த) என் தந்தையாகிய சனகனது; புணைஉறுதிரள் தோள் - பகைவராகிய கடலைக் கடத்தற்குப் புணை போல் நின்று உதவும் இயல்பு அமைந்த வலிய திரண்ட தோள்கள்; ஆர்த்து பூமியில் புரளக் கண்டேன் - பகைவரால் கட்டப்பட்டுப் பூமியில் புரளுவதைக் கண்ட (நான்); மணவினை முடித்து - திருமணச் சடங்கைச் செய்து முடித்து; என் கையை மந்திர மரபின் தொட்ட கணவனை - என் கையை மந்திரங்களில் கூறிய முறைப்படி பிடித்த கணவனாகிய இராமனை; இனைய கண்டால் அல்லது - இவ்வாறு பகைவரால் கட்டப்பட்டுப் பூமியில் புரளுவதைக் கண்டால் தான்; கழிகின்றேனோ - உயிர் நீங்குவேனோ?
கார்முகப் பாடல்களை (கம்ப. 681, 682) உள்ளடக்கிக் கூறியது. கடிமணப் பாடல்களை (கம்ப. 1248, 1249) உள்ளடக்கிக் கூறியது என்க. புணை உறுதிரள் தோள் - அடைந்தவர்க்குப் பற்றுக் கோடாகிய திரண்ட தோள் எனினும் அமையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “My father, who long ago performed a matchless sacrifice and brought me forth and raised me,
- I saw with his massive shoulders, a raft for others, bound, rolling in the dust;
- the husband who completed the wedding rite and took my hand in the way the mantras lay down,
- only when I see him in the same state will I depart from life?”
What the poem says
Cītai recalls that Caṉakaṉ found her while ploughing the ground for a great sacrifice and raised her. His strong arms, a support to all who depended on him, now lie bound in the dust. She asks bitterly whether she must also see Irāmaṉ, who married her with full Vedic rites and took her hand, reduced to the same state before her life will leave her. The verse looks back to the bow-breaking and the wedding scenes of the first book.