கம்பராமாயணம் 7720 · யுத்த 16.44

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அன்னைமீர்! ஐயன்மீர்! என் ஆருயிர்த் தங்கைமீரே!
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்றும்
முன்னம் நீர் உணர்ந்திலீரோ? உமக்கும் வேறு உற்றது உண்டோ?
துன்(ன) அரு நெறியின் வந்து தொடர்ந்திலீர்; துஞ்சினீரோ?

பொருள் · Meaning in Tamil

அன்னை மீர் - தாய்மார்களே! ஐயன்மீர் - பெரியோர்களே! என் ஆர் உயிர்த் தங்கைமீரே - என் அருமையான உயிர் போன்ற தங்கைமார்களே! என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு - என்னைப் பெற்றெடுத்த என் தந்தைக்கு; எய்தியது யாதும் - நிகழ்ந்துள்ள நிலை எதனையும்; ஒன்று முன்னம் நீர் உணர்ந்திலீரோ - சிறிதும் முன்பு நீங்கள் அறியவில்லையா? உமக்கு வேறு உற்றது உண்டோ - (இதுபோலவே) உங்களுக்கும் வேறு துன்பம் நிகழ்ந்தது உண்டோ? துன்ன அரு நெறியின் வந்து தொடர்ந்திலீர் - நெருங்குதற்கு அருமையான வழியில் வந்து (தந்தையைத்) தொடர்ந்திலீர்; துஞ்சினீரோ - (ஒருவேளை) நீங்கள் எல்லாம் இறந்து விட்டீர்களோ?

ஐயன்மீர் - சனகன் தம்பி குசத்துவசன் சதானந்த முனிவன் முதலிய பெரியவர்கள், தங்கைமீர் - ஊர்மிளை, மாண்டவி, சுருத கீர்த்தி முதலியோர். துஞ்சுதல் - மங்கல வழக்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Mothers! Elders! My younger sisters, dear as my life!
  2. Of what has befallen my father who begot and raised me, anything at all,
  3. did you not know of it beforehand? Has some other disaster come upon you?
  4. You did not come after him along that hard road; have you all died?”

What the poem says

Cītai turns in her mind to the family at Mithilā: her mothers, the elders such as her uncle Kucattuvacaṉ and the sage Catāṉantaṉ, and her sisters Ūrmiḷai, Māṇṭavi and Cutakīrtti. Did none of them know what happened to Caṉakaṉ? Has some other disaster struck them too? Why did no one follow him? She fears they may all be dead, using the gentle word “sleeping” for death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṉṉaimīr! aiyaṉmīr! eṉ ār uyirt taṅkaimīrē!
eṉṉai īṉṟu eṭutta entaikku eytiyatu yātum oṉṟu
muṉṉam nīr uṇarntilīrō? umakku vēṟu uṟṟatu uṇṭō?
tuṉṉa aru neṟiyiṉ vantu toṭarntilīr; tuñciṉīrō?