கம்பராமாயணம் 7722 · யுத்த 16.46

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இவனைத் தந்தார் - இந்தச் சனக மன்னனைப் பற்றிக் கொண்டு வந்த பகைவர்; தவம் புரிந்து - நந்தியம்பதியில் அயிர்த்து நோக்கினும் தென்திசை அன்றி வேறு திசை நோக்காது தவம் செய்து; ஆற்றல் தாழ்ந்த பரதனைக் கொணர்தற்கு - வலிமை குறைந்துள்ள பரதனைப் பற்றிக்கொண்டு வருவதற்கு; ஏதும் ஐயுறவு இல்லை சரதம் மற்று - எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை அது உண்மை; பல்நாள் வரதனும் வாழ்வான் அல்லன் - (பரதன் பகைவர் கைப்பட்டால்) பல நாள்கள் வேண்டியார்க்கு வேண்டத் தக்கது அறிந்து ஈயும் இராமனும் வாழ மாட்டான்; தம்பியும் அனையன் - இலக்குவனும் அவ்வாறே வாழமாட்டான்; விரதம் உற்று - விரதத்தைக் கைக்கொண்டு; அறத்தில் நின்றார்க்கு - அற வழியில் ஊன்றி நிற்பவர்களுக்கு; மேன்மேல் விளைவ இவை கொலாம் - மேலும் மேலும் விளையத் தக்கவை இவையே தான் போலும்.

அறத்தின் வெற்றியைப் பேசவந்த காப்பியத்தில் அறச் சோதனைகள் மிகுதி. மாயா சனகப் படலம் அத்தகைய அறச் சோதனைப் படலமாகும். பாவம் மகிழ்ச்சியால் பொங்க அறம் தடுமாறிச் சாயும் நிலையில் தொடங்கும் இப்படலம் கும்பகருணன் மரணச் செய்தி கேட்டுப் பாவம் பதைத்து விழ அறம் உள்ளே மகிழும் காட்சியோடு முடிவதை உன்னுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “It is certain: those who brought this man here, to bring Paratan too, who does penance and whose strength has waned,
  2. will find no difficulty at all; and then for many days
  3. the bestower of boons will not live; nor will his younger brother live, such as he is;
  4. is this what keeps coming, more and more, to those who keep their vows and stand in dharma?”

What the poem says

Cītai reasons that if the demons could seize Caṉakaṉ, they will easily capture Paratan, who lives as an ascetic at Nandigrām and has grown weak from penance. If that happens, Irāmaṉ, the giver of boons, will not survive the grief, and neither will Ilakkuvaṉ. She asks whether this is what dharma brings to those who keep it. The episode is one of the poem's great tests of dharma: it begins with evil exulting and righteousness reeling, and ends with the news of Kumpakaruṇaṉ's death shaking Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘caratam; maṟṟu ivaṉait tantār, tavam purintu āṟṟal tāḻnta
parataṉaik koṇartaṟku ētum aiyuṟavu illai; pal nāḷ
varataṉum vāḻvāṉ allaṉ; tampiyum aṉaiyaṉ vāḻāṉ;
viratam uṟṟu, aṟattil niṉṟārkku ivaikolām viḷaiva mēṉmēl?