கம்பராமாயணம் 7725 · யுத்த 16.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காரிகை - அழகியே! அன்னம் அன்னாய் - அன்னப் புள் போன்ற நடையழகு உடையவளே! நின்னை எய்தும் காதலால் - உன்னை அடைய வேண்டும் என்ற பெரு விருப்பத்தால்; கருதலாகாப் பேர் இடர் இயற்றலுற்றேன் - எண்ணவும் கூடாத பெருந் துன்பத்தைச் செய்யத் தொடங்கி விட்டேன்; இது பிழை பொறுத்தி - இச்செயல் தவறானது (இதனை நீ) பொறுத்துக் கொள்; இன்னும் வேர் அற மிதிலையோரை விளிகிலேன் - இன்னும் கூட (நான்) முழுமையாக அழியும்படி மிதிலையில் உள்ளவர்கள் மீது சினம் கொள்ளவில்லை; விளிந்த போதும் ஆர் உயிர் இவனை உண்ணேன் - (அவ்வாறு) சினந்த போதும் கூட இந்தச் சனகனுடைய அருமையான உயிரைக் கொன்றழியேன்; அஞ்சலை - அஞ்சாதே.
விளிதல் - சினத்தல். எய்தும் - செய்யும் எனும் பெயரெச்சம். மிதிலையோர் - வினையால் அணையும் பெயர். விளிகிலேன் - விளிக்கிலேன்; தன்வினை பிறவினைப் பொருளில் வந்தது. உயிருண்ணேன் - உண்டற்கு உரிய அல்லாத பொருளை உண்டது போலக் கூறும் மரபு பற்றி வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Lovely one! Out of my longing to win you, I have set about
- a great cruelty not to be imagined; forgive this wrong; even now
- I have not raged to destroy the people of Mithilā root and all; and even when I raged,
- I would not devour this man's precious life; do not fear, you who are like a swan!”
What the poem says
Irāvaṇaṉ now changes tone and speaks gently. He admits that his desire for Cītai has driven him to terrible deeds and asks her forgiveness. He has not yet unleashed his anger to wipe out Mithilā, he says, and even if he did, he would spare her father's life. She need not be afraid. The offer is bait: her father's safety is to be the price of her surrender.