கம்பராமாயணம் 7727 · யுத்த 16.51

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து, வேறு இடத்து இருந்து வாழ்வேன்;
நலம் கிளர்நிதி இரண்டும் நல்குவென்; நாமத் தெய்வப்
பொலம்கிளர் விமானம் தானே பொது அறக் கொடுப்பென்; புத்தேள்
வலம்கிளர் வாளும் வேண்டின், வழங்குவென்; யாதும் மாற்றேன்.

பொருள் · Meaning in Tamil

இவனுக்கு இலங்கை ஊர் ஈந்து - (இவன் விரும்பினால்) இந்தச் சனகனுக்கு இலங்கை ஊரினைக் கொடுத்து; வேறு இடத்து இருந்து வாழ்வேன் - வேறு ஓரூரில் இருந்து வாழ்கிறேன்; நலம் கிளர் நிதி இரண்டும் நல்குவென் - நன்மை விளங்குகிற சங்க நிதி பதுமநிதி இரண்டினையும் (இவனுக்குக்) கொடுப்பேன்; நாமத் தெய்வம் பொலம் கிளர் மானம் - சிறப்புடைய தெய்வத் தன்மை பொருந்திய அழகு விளங்குகிற புட்பக விமானத்தை; பொது அறத்தானே கொடுப்பென் - பிறருக்கு உரிமை என்ற பொதுத் தன்மை நீங்க இவனுக்கு உரிமையானதாகக் கொடுப்பேன்; புத்தேள் வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் - தேவர்கள் வலி தொலைக்கும் சிவபிரான் தந்த வெற்றி விளங்குகிற சந்திர காசம் என்ற வாளை விரும்பினாலும் (அதனையும்) கொடுப்பேன்; யாதும் மாற்றேன் - (கேட்கும்) எதனையும் மறுத்து உரைக்க மாட்டேன்.

அனைத்தையும் தந்து நிற்பேன் என்கிறான் இராவணன். நிதி இரண்டு - சங்க நிதி, பதும நிதி, "சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போமல்லோம்" என்றார் பிறரும். நாமம் - சிறப்பு. அச்சம் எனினும் ஆம். மானம் - விமானம். முதற்குறை, பொது அற - பிறருக்கு உரிமை என்று சொல்லாதபடி, "போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாது” என்பது புறம். (புறநா -8) புத்தேள் - தெய்வம், ஈண்டுச் சிவன். மாற்றல் - மறுத்துரைத்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “I will give the city of Ilaṅkai to him and go and live somewhere else;
  2. I will grant the two treasures that overflow with good; the famed, divine,
  3. gold-gleaming aerial car I will give him, his alone; even the god-given
  4. sword that shines with victory, if he wants it, I will bestow; I will refuse nothing.”

What the poem says

Irāvaṇaṉ raises his offer further. He will give Ilaṅkai itself to Caṉakaṉ and live elsewhere. He will give the two inexhaustible treasures, Caṅkha-nidhi and Padma-nidhi; the golden aerial car Puṣpaka, to be Caṉakaṉ's alone; and even his sword Candrahāsa, the gift of Śiva. He will refuse nothing that is asked.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ilaṅkai ūr ivaṉukku īntu, vēṟu iṭattu iruntu vāḻvēṉ;
nalam kiḷar niti iraṇṭum nalkuveṉ; nāmat teyvap
polam kiḷar vimāṉamtāṉē potu aṟak koṭuppeṉ; puttēḷ
valam kiḷar vāḷum vēṇṭil, vaḻaṅkuveṉ; yātum māṟṟēṉ.