கம்பராமாயணம் 7728 · யுத்த 16.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுந்தரப் பவள வாய் - (சீதையே) உன் அழகிய சிறந்த பவளம் போன்ற வாயினால்; ஓர் அருள் மொழி சிறிது சொல்லின் - ஒப்பற்ற கருணைச் சொல்லினைச் சிறிதாகச் சொன்னால்; இந்திரன் கவித்த மௌலி - (நான்) இந்திரன் தலையில் தரித்துள்ள மௌலியை; இமையவர் இறைஞ்சி ஏத்த - தேவர்கள் தலையால் வணங்கி வாயால் துதிக்க; மந்திர மரபின் சூட்டி - மந்திரஞ் சொல்ல முறைப்படி அணிவித்து; வானவர் மகளிர் யாரும் - தேவ மகளிர் எல்லாரும்; பந்தரின் உரிமை செய்ய - பந்தல் போலச் சுற்றிச் சூழ்ந்து உரிய பணிகளைச் செய்ய; இவன் பணியில் யான் நிற்பேன் - இந்தச் சனகன் இட்ட கட்டளைப்படி நான் நடப்பேன்.
சிறிது சொல்லின் - பெண்மையின் நாணஞ் சுட்டி வந்தது. பந்தர் - பந்தல்; கடைப் போலி. உரிமை - உரிய பணிகள், பவளவாய் - உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “The crown that Intiraṉ wears, while the gods bow and praise,
- I will place on him with the rites of the mantras, and with all the women of the gods
- serving him, crowded round like a canopy, I will stand at his command,
- if your lovely coral mouth will speak even a little word of grace.”
What the poem says
Irāvaṇaṉ promises that if Cītai will say even a few kind words to him, he will crown her father with Intiraṉ's own crown amid the praises of the gods, have the celestial women attend him, and himself serve as Caṉakaṉ's servant. He asks for only “a little” word, allowing for a woman's modesty.