கம்பராமாயணம் 7729 · யுத்த 16.53

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(சீதையே நீ எனக்கு இணங்குவாய் ஆனால்) எந்தை - என் தந்தையாகிய விச்சிரவசு முனிவன்; தன்தந்தை - தன் தந்தை ஆகிய புலத்திய முனிவனது; தாதை - தந்தையும், இவ்உலகு ஈன்ற முன்னோன் - இவ்வுலகங்களை எல்லாம் படைத்த பழையோனும் ஆகிய பிரமன்; தானே வந்து இவன் வேட்ட வரம் எலாம் வழங்கும் - தானே வந்து இச்சனகன் விரும்பிக் கேட்ட வரங்கள் எல்லாவற்றையும் கொடுப்பான்; மற்றை அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால் - மேலும் இயமன் அடிமைகள் செய்யும் பணி செய்வான்; நீர் அமிழ்தின் வந்த செந்திரு அல்லீரேல் - நீர் பாற்கடலில் தோன்றிய அமிழ்தத்தோடு உடன் உதித்த திருமகள் அல்லீராயின்; அவளும் வந்து ஏவல் செய்யும் - அத்திருமகளும் வந்து (உமக்குக்) குற்றவேல் செய்வாள்.

பிரமன், புலத்தியன், விச்சிரவசு, இராவணன் எனக் கால்வழி கொள்க. அந்தகன் - இயமன், எந்தை - மரூஉ, ஆல் - அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “My father's father's father, the First One who brought forth this world,
  2. will come himself and grant every boon this man desires; and further,
  3. Death will do the work of a slave; and unless you are yourself
  4. the red-gold Śrī who rose with the nectar, she too will come and serve you.”

What the poem says

Irāvaṇaṉ's lineage runs from Brahmā to Pulastya to Viśravas to himself, so Brahmā, the creator, is his great-grandfather. He promises that Brahmā will come and grant Caṉakaṉ whatever boons he wants, that Yama, god of death, will work like a servant, and that Lakṣmī, who rose from the milk ocean with the nectar, will come to wait on Cītai, unless Cītai herself is that goddess. Without knowing it, he speaks the truth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘entaitaṉ tantai tātai, iv ulaku īṉṟa muṉṉōṉ,
vantu ivaṉtāṉē vēṭṭa varam elām vaḻaṅkum; maṟṟai
antakaṉ aṭiyār ceykai āṟṟumāl; amiḻtiṉ vanta
centiru nīr allīrēl, avaḷum vantu ēval ceyyum.