கம்பராமாயணம் 7730 · யுத்த 16.54

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘தேவரே முதலா, மற்றைத் திண்திறல் நாகர் மண்ணோர்,
யாவரும் வந்து, நுந்தை அடிதொழுது, ஏவல் செய்வார்;
பாவை! நீ இவன் இல் வந்த பயன், பழுது ஆவது அன்றால்,
மூ உலகு ஆளும் செல்வம் கொடுத்தது; முடித்தி என்றான்

பொருள் · Meaning in Tamil

தேவரே முதலா - தேவர்கள் முதலாக; மற்றைத் திண் திறல் நாகர் - மற்றும் உள்ள மிக்க வலிமை படைத்த நாகர்கள்; மண்ணோர் - நிலவுலகத்தவர்கள் (ஆகிய); யாவரும் வந்து - எல்லோரும் திரண்டு வந்து; நுந்தை அடி தொழுது - உன் தந்தையாகிய சனகனது திருவடிகளைத் தொழுது; ஏவல் செய்வார் - கட்டளை இட்ட தொழிலைச் செய்வார்கள்; பாவை - ஓவியப்பாவை போன்றவளே; நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால் - நீ இந்தச் சனகனுக்குப் பிறந்ததனால் (அவன் பெறப் போகும்) நன்மை பழுது படாதது ஆகும்; மூ உலகு ஆளும் செல்வம் கொடுத்து - (உன் தந்தைக்கு நீ) மூன்று உலகங்களையும் ஆளும் செல்வச் சிறப்பைக் கொடுத்து; அது முடித்தி என்றான் - நீ பிறந்ததன் பயனை முடிப்பாய் என்றான்.

பாவை - உவமை ஆகு பெயர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “The gods first of all, and the Nāgas of mighty strength, and the people of the earth,
  2. all will come, worship your father's feet and do his bidding;
  3. O doll-like one, the fruit of your having been born to him shall not be wasted:
  4. give him the wealth of ruling the three worlds, and so fulfil it,” he said.

What the poem says

Irāvaṇaṉ ends his speech: gods, serpent-beings and men will all bow at Caṉakaṉ's feet and serve him. Cītai, he says, can make her birth as Caṉakaṉ's daughter worthwhile by winning her father the rule of all three worlds. The price, left unsaid, is that she yield to Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tēvarē mutalā, maṟṟait tiṇtiṟal nākar maṇṇōr,
yāvarum vantu, nuntai aṭi toḻutu, ēval ceyvār;
pāvai! nī ivaṉiṉ vanta payaṉ, paḻutu āvatu aṉṟāl,
mūvulaku āḷum celvam koṭuttu, atu muṭitti eṉṟāṉ