கம்பராமாயணம் 7733 · யுத்த 16.57

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கமலக் கண்ணன் - தாமரைக் கண்ணனாகிய இராமனது; வில் உமிழ் பகழி - வில்லில் இருந்து வெளிப்படும் அம்புகள்; விலங்கு எழில் அலங்கல் மார்பம் புல்லுவ - எழில் விளங்குகின்ற மாலையை அணிந்த மார்பில் வந்துசேரப் போகின்றன; காகம் மதுர மாற்றம் சொல்லுவ - காக்கைகள் ஒன்றோடொன்று இனிய மொழிகளைச் சொல்லுவனவாய்; உன் கண்ணை துண்டத்தால் உண்டு கல்லுவ - உன்னுடைய கண்களை மூக்கினால் கொத்தித் தோண்டி உண்ணப் போகின்றன; பின்னர் புலவு நாறு அலகை எல்லாம் - அதற்குப் பின்னர் புலால் நாற்றம் வீசுகின்ற பேய்கள் எல்லாம்; களிப்புக் கூர்ந்து புல்லுவ - மகிழ்ச்சி மிகுந்து உன்னைத் தழுவப் போகின்றன.

உன்னை இராமபிரானது அம்புகள் புல்லி வீழ்த்த உன் கண்ணைக் காகங்கள் தோண்டி உண்ணப் போகின்றன. உன் உடலைப் புலால் நாற்றம் வீசுகின்ற பேய்கள் தழுவப் போகின்றன என்றாள். காகம் கர்ண கடூரமாகக் கத்துவதைப் பிற குறிப்பு வகையால் “சொல்லுவ, மதுர மாற்றம்” என்கிறாள். கல்லுதல் - தோண்டுதல், அலகை - பேய், கமலக் கண்ணன் - உவமைத் தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Speaking sweet words, devouring with their beaks, your eyes
  2. they will dig out, the crows; there will come and mingle, from the lotus-eyed one's
  3. bow, the arrows it spits; and after that, your chest, with its garland of rare beauty,
  4. all the ghouls that stink of raw flesh will embrace, in high delight.”

What the poem says

Cītai continues her curse. Irāmaṉ's arrows will strike Irāvaṇaṉ's garlanded chest; crows will peck out his eyes while cawing their “sweet words” to one another; and stinking ghouls will gleefully embrace his corpse. Calling the harsh cawing of crows “sweet speech” is deliberate irony, turning Irāvaṇaṉ's plea for sweet words back on him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘colluva matura māṟṟam, tuṇṭattāl uṇṭu, uṉkaṇṇaik
kalluva, kākam; vantu kalappaṉa, kamalak kaṇṇaṉ
vil umiḻ pakaḻi; piṉṉar, vilaṅku eḻil alaṅkal mārpam
pulluva, kaḷippuk kūrntu, pulavu nāṟu alakai ellām