கம்பராமாயணம் 7734 · யுத்த 16.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீரன் - வீரப் பெருமகனாகிய இராமபிரானது; இரும்பு இயல் வயிர வாளி இடறிட - இரும்பால் செய்யப்பட்ட வலிமையான அம்புகள் இடறித் தள்ளுவதால்; எயிற்றுப் பேழ்வாய்ப் - பற்களைக் கொண்ட பிளவுபட்ட வாயினை உடைய; பெரும்பியல் தலைகள் - பெரிய பிடரொடு கூடிய தலைகள்; சிந்திப் பிழைப்பிலை முடிந்தாய் என்ன - வெட்டித் தள்ளப்பட்டு பிழைத்தல் இன்றி முடிந்து போனாய் என்று; அரும்பு இயல் துளவம் பைந்தார் அனுமன் - அரும்புகளால் கூடிய பசிய துளசி மாலையை அணிந்த அனுமன்; வந்து அளித்த அந்நாள் - வந்து கருணையோடு சொல்லப் போகிற அந்த நாளில்; நின்னுழை வார்த்தை - உன்னைப் பற்றிய சொற்களை; விரும்பி நான் கேட்பது உண்டால் - நான் மிக விருப்பத்தோடு கேட்கப் போவது உண்டு.
தலைவர்க்குரிய மாலை அடியவனுக்கு உரியதாகக் கூறப்பட்டது. வயிரம் - உறுதி. பியல் - பிடரி, ஆல் - அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- “I shall gladly hear news of you, when ‘The hero's
- iron-hard diamond arrows struck and sent your fanged, gaping-mouthed
- heads, thick-necked, scattering, and with no escape you were finished,’
- Aṉumaṉ, with his fresh garland of budding tulasi, comes and tells me that day.”
What the poem says
Cītai says the news about Irāvaṇaṉ that she really wants to hear is the report that Irāmaṉ's steel arrows have struck off his fanged heads and ended him. She imagines Aṉumaṉ bringing her that message, as he once brought news of Irāmaṉ. The tulasi garland, normally Viṣṇu's, is here given to his devoted servant.