கம்பராமாயணம் 7736 · யுத்த 16.60

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெய்யவன் அனைய கேளா - கொடிய தன்மை உள்ளவனாகிய இராவணன் அதனைக் கேட்டு; வெயில் உக விழித்து - வெப்பம் வெளிப்படுமாறு சினந்து விழித்துப் பார்த்து; வீரக் கை பல பிசைந்து - வீரம் நிறைந்த (தன் இருபது) கைகளையும் பிசைந்து; பேழ்வாய் எயிறு புக்கு அழுந்தக்கவ்வி - பிளந்த வாயில் உள்ள பற்கள் உதடுகளில் அழுந்தப் பதியும்படி கடித்து; தையல் மேல் ஓடலோடும் - சீதையைக் (கொல்ல) விரைந்து ஓடிய போது; மகோதரன் தடுத்தான் - மகோதரன் (அவன் செல்வதைத்) தடுத்து; ஈன்ற மொய்கழல் தாதை வேண்ட இசையும் - தன்னைப் பெற்ற நெருங்கிய வீரக்கழல் அணிந்த தந்தையாகிய (கட்டுண்ட மாயாசனகன்) வேண்டிக் கேட்டுக் கொண்டால் (சீதை) இணங்குவாள்; நீ முனியல் என்றான் - நீ (இவள் மீது) சினவாதே என்று கூறினான். வெயில் உக விழித்தல், கை பிசைதல், வாய் எயிறு புக்கு அழுந்தக் கவ்வுதல், ஆகியவை சினக் குறிகளாம். கேளா - செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம். கழல் - தானியாகு பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The cruel one, hearing such words, glared so that heat poured from his eyes, and wringing
  2. his many heroic hands, biting down so that his teeth sank deep in his gaping mouth,
  3. he rushed at the lady; at once Makōtaraṉ stopped him: “If the father
  4. with the close-set anklets who begot her pleads, she will consent; do not be angry,” he said.

What the poem says

Cītai's curse enrages Irāvaṇaṉ. His eyes blaze, he wrings his twenty hands, bites his lips with his fangs, and rushes forward to kill her. Makōtaraṉ, author of the plan, restrains him: let the false Caṉakaṉ, her father, plead with her, and she will give in. Glaring, wringing the hands and biting the lips are conventional signs of rage.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veyyavaṉ aṉaiya kēḷā, veyil uka viḻittu, vīrak
kai pala picaintu, pēḻ vāy eyiṟu pukku aḻuntak kavvi,
taiyalmēl ōṭalōṭum, makōtaraṉ taṭuttāṉ; ‘īṉṟa
moy kaḻal tātai vēṇṭa icaiyum; nī muṉiyal ‘eṉṟāṉ