கம்பராமாயணம் 7738 · யுத்த 16.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூவின் மேல் இருந்த தெய்வத்தையலும் - செந்தாமரை மலரின் மேல் தங்கி உள்ள தெய்வப் பெண்ணாகிய திருமகளும்; பொதுமை உற்றாள் - திருமாலுக்கு மட்டுமன்றிப் பிற செல்வத்தை உடையவர் அனைவருக்கும் பொதுவாதலை அடைந்தாள்; பாவி யான் பயந்த நங்கை - பாவியே! நான் பெற்ற பெண்ணே; நின் பொருட்டாகப் பட்டேன் - உன் காரணமாகச் சிறைப்பட்டேன்; ஆவி போய் அழிதல் நன்றோ - (உனக்காக) என் உயிர் போய் (நான்) அழிந்து படுதல் நல்லதா? அமரர்க்கும் அரசன் ஆவான் - தேவர்களுக்கும் அரசனாய் உள்ளவன் ஆன இராவணனது; தேவியாய் இருத்தல் தீதோ - தேவியாய் இருத்தலில் (என்ன) தீது? சிறையிடைத் தேம்புகின்றாய் - (எதற்காக) சிறையில் இருந்தது நினைத்து நினைத்து வருந்துகிறாய்.
பொதுமை உறல் - திருமாலுக்குச் சிறப்பு உரிமையும், பிற செல்வர்க்குப் பொது உரிமையும் பட இருத்தல். தேம்புதல் - நினைந்து நினைந்து வருந்துதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Even the divine lady who sits upon the lotus became common to many;
- daughter born to sinful me! For your sake I have been taken captive;
- is it good that my life should go and I perish? To be the queen
- of the one who is king even of the immortals, is that evil? You pine away in prison.”
What the poem says
The false Caṉakaṉ argues that even Lakṣmī, the lotus-seated goddess, is not Viṣṇu's alone: as the goddess of fortune she belongs in some measure to everyone who has wealth. He has been made a prisoner for Cītai's sake: would she let him die? What harm is there in becoming queen to Irāvaṇaṉ, lord even of the gods, instead of wasting away in captivity?