கம்பராமாயணம் 7741 · யுத்த 16.65

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அறம்கெட, வழக்கு நீங்க, அரசர்தம் மரபுக்கு ஆன்ற
மறம்கெட, மெய்ம்மை தேய, வசைவர மறைகள் ஓதும்
திறம்கெட, ஒழுக்கம் குன்ற, தேவரும் பேணத் தக்க
நிறம்கெட, இனைய சொன்னாய்; சனகன் கொல், நினையின், ஐயா!

பொருள் · Meaning in Tamil

அறம் கெட - அறம் ஒழிய; வழக்கு நீங்க - (தொன்று தொட்டு வரும்) வழக்கு முறை அழிய; அரசர் தம் மரபிற்கு ஆன்ற மறம் கெட - அரசர்களுடைய குலத்துக்குப் பொருந்திய சிறந்த வீரம் தொலைய; மெய்ம்மை தேய - சத்தியம் குறைபட; வசைவர - பழி (தேடி) வர; மறைகள் ஓதும் திறம் கெட - வேதங்கள் குறிப்பிட்டுள்ள கொள்கைகள் மாய; ஒழுக்கம் குன்ற - நல்லொழுக்கம் சிதைந்து கெட; தேவரும் பேணத் தக்க நிறம்கெட - தேவர்களும் விரும்பிக் காப்பாற்றத் தக்க புகழ்த் திறமாகிய ஒளி மழுங்க; இனைய சொன்னாய் - இத்தன்மையான சொற்களைச் சொன்னாய்; நினையின் ஐயா சனகன் கொல் - எண்ணிப் பார்த்தால் ஐயா (நீ) சனகன்தானோ?

தோற்றத்தால் சனகன் ஆயினும் உன் சொல்லால் நீ சனகன் தானா என்ற ஐயம் ஏற்படுகிறது என்கிறாள் சீதை. இப்பாடல் தன் தந்தையின் அற வழி வாழ்க்கையில் சீதை கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கையைக் காட்டுகிறது. நிறம் - புகழ்த் திறமாகிய ஒளி, கொல் - இடைச்சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “So that dharma perishes, custom departs, the valour befitting
  2. the line of kings perishes, truth wears away, disgrace comes, the way
  3. the Vedas teach is ruined, right conduct declines, and the lustre
  4. that even the gods would cherish is lost — you have spoken such words; are you Caṉakaṉ, if one thinks about it, sir?”

What the poem says

Cītai lists everything such advice would destroy: dharma, ancient custom, royal valour, truth, the Vedic way, good conduct and a glory even the gods would guard. Then she asks pointedly whether the speaker can really be Caṉakaṉ. He looks like her father, but his words make her doubt him; her faith in her father's righteousness runs deep.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟam keṭa, vaḻakku nīṅka, aracartam marapiṟku āṉṟa
maṟam keṭa, meymmai tēya, vacai vara maṟaikaḷ ōtum
tiṟam keṭa, oḻukkam kuṉṟa, tēvarum pēṇat takka
niṟam keṭa, iṉaiya coṉṉāy; caṉakaṉkol, niṉaiyiṉ, aiyā!