கம்பராமாயணம் 7742 · யுத்த 16.66

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘வழிகெட வரினும் தம்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும், மார்பம்
கிழிபட அயில்வேல் வந்து கிடைப்பினும், சான்றோர் கேட்கும்
மொழிகொடு வாழ்வது அல்லால், முறை கெடப் புறம் நின்று ஆர்க்கும்
பழிகொடு வாழ்தல் செய்யும் பார்த்திபர் உளரோ? பாவம்!

பொருள் · Meaning in Tamil

வழி கெட வரினும் - தங்களுடைய கால்வழியே அழியும் நிலைமை வரினும்; தம் தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் - தத்தமுடைய வாழ்க்கையே தேய்ந்து அழிந்து போவதாயினும்; மார்பம் கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும் - மார்பு கிழிபடுமாறு கூர்மையான வேல் வந்து எதிர்ப்படினும்; ஆன்றோர் கூறும் மொழிகொடு வாழ்வது அல்லால் - சான்றோர் கூறும் நன் மொழியைக் கைக்கொண்டு வாழ்வதல்லாது; முறை கெடப் - அறவழி நீங்கப்; புறம் நின்று ஆர்க்கும் பழிபட வாழ்கிற்பாரும் பார்த்திபர் - மறைவில் இருந்து (பலறி ஒலித்துப் பழி தூற்றும்படி வாழ்பவர்களாகிய அரசர்; உளரோ - உன்னைத் தவிர வேறு யாராவது உண்டா? பாவம் - பாவம்.

முன் பாடலில் சனகன் கொல் என்று அயிர்த்த சீதை இப்பாடலில் மேலும் ஐயத்தோடு சில கூறினாள் என்க. வழி - பரம்பரை, இறிதல் - அழிதல், கிடைத்தல் - எதிர்ப்படல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Even if ruin comes to their line, even if their own lives wane and end, even if
  2. a sharp spear comes to tear open their chest, other than living by the word
  3. the wise have spoken, are there any kings who would live on, while order is ruined
  4. and people outside clamour in blame? What a sin!”

What the poem says

Cītai's doubt grows into contempt. A true king, she says, holds to the counsel of the wise even if his dynasty is wiped out, his own life ends or a spear rips open his chest. What king would choose to live on in disgrace, with dharma broken and the world crying shame behind his back? Only this false father.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vaḻi keṭa variṉum tam tam vāḻkkai tēyntu iṟiṉum, mārpam
kiḻipaṭa ayil vēl vantu kiṭaippiṉum, āṉṟōr kūṟum
moḻikoṭu vāḻvatu allāl, muṟai keṭap puṟam niṉṟu ārkkum
paḻi paṭa vāḻkiṟpārum pārttipar uḷarō? pāvam!