கம்பராமாயணம் 7743 · யுத்த 16.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீயும் நின் கிளையும் - நீயும் உன் உறவினர்களும்; மற்று இந்நெடுநில வரைப்பும் - மேலும் இந்த நீண்ட நிலப்பரப்பில் உள்ள மக்களும்; நேரே மாயினும் - (என் கண்ணுக்கு) நேராக அழியினும், முறைமை குன்ற வாழ்வெனோ - ஒழுக்க முறைமை அழிய வாழும் வாழ்வை வாழ்வேனோ? (வாழேன்); வயிரத் திண் தோள் ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு - வயிரம் போன்ற வலிய தோள்களை உடைய ஆயிரம் திருநாமத்துக்குரிய சக்கரப் படை தாங்கிய திருமாலின் திருவவதாரமான இராமபிரானுக்கு; அடிமை செய்வேன் - அடிமை செய்பவள் ஆகிய (நான்); நாண் துறந்து - நாணத்தைக் கைவிட்டு; ஆவி நச்சி - உயிர் வாழ்வதை விரும்பி; நாயினை நோக்குவேனோ - நாய் போன்ற (இராவணனை) கண்ணாலும் கருத்தாலும் பார்ப்பேனோ!
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Even if you and your kin, and this whole wide expanse of earth,
- should perish before my eyes, would I live with right order broken? I, who serve
- Hari of the diamond-strong shoulders, of the thousand names and the discus,
- would I look upon a dog, casting off shame, out of craving for life?”
What the poem says
Cītai declares that even if her father, his whole family and every person on earth were to die before her eyes, she would never live in a way that breaks dharma. She is the servant of Irāmaṉ, Viṣṇu of the thousand names who bears the discus. She will not shamelessly turn her eyes, or her thoughts, towards that dog Irāvaṇaṉ just to stay alive.